Thursday, June 9, 2016

தீர்க்கதரிசி - மரணம் பற்றி

மரணம் பற்றி
பிறகு ஆல்மித்ரா
இப்போது மரணம் பற்றி கேட்கிறோம்
சொல்லுங்கள் என்றதும் அவர் சொன்னார்:

இறப்பின் இரகசியத்தை இப்போது தெரிந்து கொள்வீர் - ஆனால்
உங்கள் வாழ்க்கையில் மனப்பூர்வமாக வேண்டிக்கொண்டால் அன்றி
எப்படி உங்களால் அதை அறிய முடியும்?
இரவில் மட்டும் காணும் சக்திகொண்ட ஆந்தை விழிகளால்
வெளிச்சத்தின் மர்மத்திரையை விலக்க முடியாது

உண்மையில் மரணத்தை தாங்கும் உறுதி உங்களுக்கு இருந்தால்
வாழ்க்கை எனும் உடலை விசால இதயத்தால் நோக்கவும்
வாழ்வும் சாவும் ஒன்றுதான்
ஆறும் கடலும் ஒன்று என்பது போல்
எல்லையற்ற அமைதியான அறிவு
உங்கள் நம்பிக்கை ஆசை இவைகளின் அடி ஆழத்தில் கிடக்கிறது
பனிகட்டிகளுக்கு கீழே இருக்கும் விதைகளின் கனவு போல்
வசந்த்திற்கு உங்கள் இதயம் கனவு காண்கிறது
கனவுகளை நம்புங்கள்
அதில்தான் நிலைபேற்றின் வாயில் மறைந்திருக்கிறது
நாடாளும் மன்னவனை பார்த்து
மாடுமேய்க்கும் இடையன்  கும்பிடும் கரங்களின் 
மரியாதை நடுக்கம்தானே உங்களின் மரண அச்சம்
அரசனின் தரும் பட்டத்தை அணிவான் என்பதால்
நடுக்கத்தை மீறி மேய்ப்பன் மகிழ்ச்சியில் இருப்பதில்லையா?
இருந்தாலும் நடுக்கத்தைப் பற்றிய அதீத கவனம்
அவனுக்குள் இருக்கிறது அல்லவா?
காற்றுவெளியில் அம்மணமாக நிற்பதையும்
சூரிய ஒளியில் கரைவதையும் தவிர்பதற்கல்லாமல்
வேறு எதற்காக சாக வேண்டும்?
மூச்சு அடங்குவது என்றால் என்ன?
கடவுள் என்னும் கற்பனையை எட்டிப்பிடிக்க
எழும்பி விரியும் ஓய்வில்லா அலைகளில் இருந்து
சுவாசத்தை விடுவிப்பது தானே?  
அமைதி ஆற்றின் நீரைப் பருகும் போதுதான்
உண்மையில் நீங்கள் பாடுவீர்கள்.
மலையின் உச்சியை அடைந்த பிறகுதான்
ஏறவே துவங்குவீர்கள்  
பூமி உங்கள் கால்களை வாங்கிய பிறகே

மெய்யாலும் நீங்கள் ஆடுவீர்கள்  

1 comment:

hafezjacobina said...

The Best Casino in Melbourne, Australia | No Deposit Bonus
The Top 10 sss포커 Casino in 아시안부키 Melbourne, Australia · Tote Casino · slot 뜻 Microgaming · Betsoft · Microgaming · 있습니다 PlayOJO · Golden Tiger · RTG Slots · NetEnt · Spin & 해외 배팅 Win.