Thursday, June 9, 2016

தீர்க்கதரிசி - வழிபாடு பற்றி

வழிபாடு பற்றி
பெண்பாதிரியார் ஒருவர்
பிராத்தனையைப் பற்றி சொல்லுங்கள்
என்றதற்கு அவர் பதில் சொன்னார்

வருத்தத்திலும் தேவையிலும் பிராத்திக்கின்றீர்
முழுமையான மகிழ்ச்சியிலும்
நிறைவான நாட்களிலும் வழிபடுகிறீர்

விசும்பில் உங்களை விரிவாக்குவது தவிர
வேண்டுதல் என்பது வேறு என்ன?

பிராத்தினை என்பது வசதி வேண்டி
விண்வெளியில் இருளை ஊற்றுவது போலாகும்
பிராத்தினை என்பது இதய விடுதலைக்கு
மகிழ்ச்சியை தாரை வார்ப்பதும் ஆகும்

பிராத்தனை செய்ய உயிர்மை கூப்பிடும் போது
அழுவதைத் தவிர உங்களால் முடியாதென்றால்
அழுதாலும் சிரிக்கும்வரை
துழவிக் கொண்டே இருக்க வேண்டும்

காற்றுவெளியில் பிராத்திக்கும் போது
பிராத்தனை செய்பவர்களை சந்திக்க எழுகிறீர்
சந்திக்க இயலாதவர்களை எல்லாம் அங்கே சந்திப்பீர்

ஆகையால் பிராத்தனை
கண்ணுக்குப் புலப்படாத கோயில் நுழைவாக இல்லாமல்
களிப்பும் இனிப்புமான வழிபாட்டுக்குழுவாக இருக்கட்டும்

பெறுவதற்காக இல்லாமல் தருவதைத் தவிர
கோயில் நுழைவுக்கு வேறு நோக்கம் இருக்கக் கூடாது

பெருமையுடன் அல்ல
பணிவோடு கோயிலுக்குள் போகவேண்டும்

அடுத்தவர் நலனுக்காக வேண்டிக்கொண்டாலும்
அங்கே யாருக்கும் அது கேட்கக் கூடாது
கோயிலுக்கு போகும் போது
யாருக்கும் தெரியாமல் போனால் போதும்

பிராத்தனையை வார்த்தைகளில் கற்பிக்க முடியாது
வார்த்தைகளை இறைவன் உங்கள் உதடுகள் மூலம் பேசுவதால்
வார்த்தைகளை இறைவன் கவனிப்பது இல்லை

கடல் காடு மலைகளின் வேண்டுதலை விளக்க முடியாது
கடல் காடு மலைகளுக்குப் பிறந்தவர்கள் நீங்கள் ஆதலால் அந்த
வேண்டுதலை உங்கள் இதயத்தில் காணலாம் அவை
சலமற்ற இரவில் அமைதியுடன் இப்படிச் சொல்வதைக் கேட்கலாம்
எங்கள் இறைவனே
உங்கள் விருப்பமே எங்களின் மனோதிடமாகும்.
உங்கள் நாட்டமே எங்களின் ஆர்வமாகும்.
உங்கள் தூண்டுதலே எங்கள் மெல்லிய இரவுகளை
மென்மையான  நாட்களாக மாற்றுகிறது.
எங்களின் தேவைகள் என்ன என்பது
தேவை பிறக்கும் முன்பே அய்யனே நீங்கள் அறிவீர்,
அவைகளை நிச்சயம் உங்களை வேண்ட மாட்டோம்.
எங்கள் தேவைகளை தருவித்தவர் நீங்களே ஆகவே

கொடுக்க வேண்டியதைக் கூடுதலாகக் கொடுக்கவும்

No comments: