Sunday, April 30, 2017

தமிழ்நாட்டின் மதுவிலக்கு வரலாறு

தமிழ்நாட்டின் மதுவிலக்குப் பற்றி . விவரங்கள் விளக்கங்கள் வெளியாகட்டும். உண்மைகள் உலகுக்குத் தெரியட்டும். படிக்க கற்றுதந்தார் காமராஜர்  குடிக்க கற்றுதந்தார் கருணாநிதி. இப்படி ஒரு புலம்பல் எத்தனையோ ஆண்டுகளாக. நேருவுக்கு நெருக்கமானவர். இரண்டு பிரதமர்களை. இருக்கையில் அமர்த்தியவர். இந்திய காங்கிரசின் இணையிலா தலைவர் என்றெல்லா பெருமைக்கும் உடையவர். மதுவிலக்கை மகாத்மாவின் மகோன்னதக் கொள்கையை மாநிலங்கள் எல்லாவற்றிலும் ஏன் அமுல் படுத்தவில்லை என்று யாராவது கேளுங்கள், காந்தியார் கனவை நினைவாக்க காங்கிரசார் செய்த காரியம் என்ன? 1966 ஆண்டுக்கு முன்பே தாம் ஆட்சிபுரிந்த மாநிலங்கள் எல்லாம் மதுபானக் கடைகளைத் திறக்க எது காரணம் என்று கேட்பீர்.
1971 ல் கலைஞர் ஆட்சியில் கள்ளுக்கடை திறந்தது கடும்குற்றம் என சொல்லுபவரே கேளுங்கள். மதுவிலக்கு அன்று இரத்து செய்யவில்லை மாறாக தள்ளி வைக்கப்பட்டது மதுவிலக்கு அமுல்செய்ய மானியம் மைய அரசு மறுத்தது எதனால் திறந்த கடைகளை மூடினால் மானியம் திறக்காமலே கேட்டால் கிடைக்காது என்றனர் எந்த மாநிலமும் ஏற்காத நிலையில் சொந்த மாநிலத்தில் சொற்பகாலம்  திறந்து மூடுவோம் மதுக் கடைகள் இரந்து கேட்கும் இழிநிலை எதற்கு உரிமையுடன் கேட்போம் உயர்நிதியம் உரிய நேரத்தில் உரத்த குரலில்என்பதே காரணம் எவருக்கும் தெரியும் உண்பது சோறானால் உணருவீர் உண்மை

1973 ஆகஸ்ட்டில்  இரண்டே ஆண்டுக்குள் இழுத்து மூடப்பட்டது கள்ளுக் கடைகள் கலைஞர் ஆட்சியில் 1974 செப்டம்பர் மீண்டும் பூத்தது பூரண மதுவிலக்கு கொண்டு வந்தவர் கலைஞர் ஐம்பத்தாறு கோடி இழப்பீட்டுக் கணக்கு எடுத்துச் சொன்னார் எல்லோரிடத்தும் மானியம் கேட்டார் மத்திய அரசிடம் மதுவிலக்கு மக்களுக்கானது அகில இந்தியாவிலும் அமுல் படுத்தப்படும் அவசரம் வேண்டாம் ஆலோசனை செய்கிறோம் பாரதப் பிரதமர் இந்திரா காந்தி பகர்ந்தார் என்பது பத்திரிகை செய்தி

இந்த நிலையிலே நீதிமன்ற தீர்ப்பு ஒன்று இந்தியாவை  நிலைகுலையச் செய்தது வாதுசெய்ய முடியாமல்  வாடச்செய்யும் அரசியல் நெருக்கடி அம்மையார் இந்திராவை அலைகழிக்கச் செய்தது அதனால் அவசரச் சட்டம் போட்டார் எமர்ஜென்சி என்று சென்னார் ஏதோச்சைகார ஆட்சி புரிந்து எதிர்த்தவரை எல்லாம் சிறைக்குள் தள்ளினார் சித்ரவதை பண்ணிணார்

அப்போது தமிழகம் தனித் தீவாய் இருந்தது. எமர்ஜென்சிக் கொடுமை  எட்டிப் பார்க்க முடியவில்லை. சுதந்திரக் காற்றை சுவாசிக்க முடியாமல். சுதேசியம் பேசியவர் எல்லாம் தமிழ்தேசம் வந்து தஞ்சம் புகுந்தார்கள். கலைஞர் ஆட்சியின் கடாட்சம் அது.கர்மவீரர் காமராசரை கைது செய்ய கட்டளை வந்தும் முடியாது என்றார் முத்தமிழ் அறிஞர் முத்துவேலர் மகன். மக்களாட்சித் தத்துவத்தை யாரும் மண்தோண்டிப் புதைப்பதற்கு என்நாளும் மனதாலும் ஒப்போம் என்று சென்னைக் கடற்கரையில் சூளுரைத்தார் அண்ணாவின் அன்புத் தம்பி
நேருவின் மகளே திரும்பப் பெறுக நெருக்கடிநிலை சட்டத்தை என்று நேர்பட பேசினார் கலைஞர் நெஞ்சம் பொறுக்கவில்லை.வஞ்சம் தீர்க்கப்பட்டது
1976 பிப்ரவர் 2. கலைஞர் ஆட்சி கலைக்கப்பட்டது. தமிழர் முன்னேற்றம் தடை செய்யப்பட்டது. மதுவிலக்கைப் பற்றி மறுபடியும் பார்ப்போம்
1974 முதல் 1976 வரை முழுமதுவிலக்கு முதல்வர் கலைஞர் ஆட்சியில் எப்போதும் போல் பர்மிட் முறை தப்பாது என்ற காரணத்தால்மருத்துவச் சான்றுடன். வயது வரம்பு 45 பர்மிட் கட்டணம் 500 ரூபாய்.இன்றைய மதிப்பில் ஒரு லட்சம். உயர்ந்த கட்டணம் என்று உச்சநீதிமன்றம் வரை சென்று உத்தம புத்திரர்கள் சிலர் உத்தரவு பெற்றார் 100 ஆகக் குறைக்க
கலைஞர் ஆட்சியின் கடும் அமுலாக்கம் விலைஞர் செய்கையால் வீண்முயற்சி ஆனது ஆனால் வயதுவரம்பு 30 கட்டணம் ரூ 25 என குறைத்து எல்லோரையும் குடிக்கத் தூண்டிய மகான் யார் தெரியுமா? மதுவைத் தொடாத மாமனிதர் என்று மக்கள் நம்பிய புரட்சித் தலைவர்
1971 ல் மதுவிலக்கு தளர்த்தப்பட்ட போது சுதந்தராகட்சி உறுப்பினர் திரு ஹண்டே அவர்கள் அண்ணா வழியில் நடக்கிறோம் என்று சொல்லி வருகிறீர்களே அதன்படி மதுவிலக்கு விசயத்தில் நடக்கிறீர்களா?” என்று கேட்டார்.
முதல்வர் கலைஞர் திரு ராஜாஜி மதுவிலக்கு விஷயத்தில் மிகத் தீவிரமானவர் அல்லவா இந்தியாவிலேயே தமிழகத்தில் முதல் முதல் மதுவிலக்கு கொண்டு வந்தவர் அல்லவா அவரைத் தலைவராகக் கொண்ட சுதந்திரா கட்சியின் முதல் அமைச்சர் சிங்தேவ் ஆளும் ஒரிசாவில் மதுவிலக்கு இல்லையே ஏன்என்று கேட்டார்.
திரு ஹண்டே அவர்கள் சாமார்த்தியமாக ராஜாஜிக்கும் சிங்தேவுக்கும் பலபிரச்சனைகளில் கருத்து வேறுபாடு உண்டு ஆனால் அண்ணாவழி நடப்பதாகச் சொல்லி ஊரை ஏமாற்றுகிறீர்கள்என்று சொல்லவும் சபாநாயகர் ஊரை ஏமாற்றுவதாக சொல்லக்கூடாது அவை மரபு அல்லஎன்று சொல்ல வரும்போது கலைஞர் குறிக்கிட்டு உறுப்பினர் சொல்ல வேண்டியதை சொல்லி முடிக்கட்டும்என்கிறார்.
திரு ஹண்டே அவர்கள் தொடர்ந்து மதுவிலக்கை ரத்து செய்துவிட்டு அண்ணாவைப் பின்பற்றுகிறேன் என்று சொல்கிறீர்கள். இராஜாஜி இந்த விஷயத்தில் சில கருத்து வேறுபாடுகளுக்கு இடம் கொடுக்கிறார். அவர் கருத்தை நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டியதில்லைஎன்று பேசும் போது அண்ணா.மதுவிலக்குப் பற்றி பேசிய பேச்சை எல்லாம் மேற்கோள் காட்டுகிறார்.
கலைஞர் அதற்கு பதில் சொல்கிறார் பாருங்கள் அண்ணாவைப்பற்றி ஹண்டே இவ்வளவு மரியாதையாகப் பேசியதற்கு நன்றி. பாடப் புத்தகத்தில் அண்ணாவை பற்றி ஒரு பாடம் சேர்த்ததற்கு கண்டனம் தெரிவித்த கூட்டத்தில் நீங்கள் பேசியவர் என்பது நினைவில் இருக்கிறது. உங்களுடை தலைவர் ராஜாஜி அவர்கள் அகால மரணம் அடைந்தவர்கள் எல்லாம் அவதாரப் புருஷன் ஆகமுடியாதுஎன்று சொன்னதும் எங்கள் நெஞ்சில் இன்னும் உறுத்தாமல் இல்லை. ஆனால் அதை எல்லாம் ஒரு பக்கம் ஒதுக்கிவிட்டு நடந்து கொள்கிறோம். இந்த நிலையில் இப்படியெல்லாம் பேசியவர்களுக்கு அண்ணாவை பற்றி பேச என்ன தகுதி இருக்கிறது?”
( 21-06-1971 சட்டமன்ற நிகழ்ச்சி இது)
அது மட்டுமா மதுவிற்கு எதிரான கருத்துகளை மக்களிடம் பரப்பிட கலைஞர் மதுவிலக்குப் பிரச்சாரக் குழு அமைத்து எம்ஜிஆர்-ஐ தலைவர் ஆக்கினார் 1971-ல். 1989-ல் திரு கிருஷ்ணசாமி பாரதி சுதந்தரப்போராட்ட தியாகி மாயாண்டி பாரதியின் மகனார்
2016 ல் மீண்டும் திமுக ஆட்சி அமையும் அப்போது அய்யா சசிபெருமாள் அந்தப் பதவிக்கு வருவர் என்று பந்தயம் கட்டியவர் உண்டு. அனால் அது பகல் கனவாக போனது மட்டுமல்ல அந்த காந்தியர் கரண்ட்டு கோபுரத்தில் ஏறி  ஆட்சியரை மிரட்டிய போது உருட்டிவிடப்பட்டு உயிர் விட்டார் என்று ஊரார் பேசும்படி மர்மத்தில் மரணம் சம்பவித்தது.

எம்ஜிஆர் ஆட்சியிலோ அவருடைய அம்முவின் ஆட்சியிலோ எப்போதும் மதுவுக்கு எதிரான பரப்புரை இருந்ததில்லை மாறாக மதுவிற்பனையைப் பரவலாக்கினர் மதுபானத் தொழிற்சாலைகள் அனுமதி முதலில் பொன்மனச் செம்மல் ஆட்சியிலேதான் சாராய சாம்ராஜ்யம் சக்கைபோடு போட்டது யாராலும் தடுக்க முடியாத அளவு ஜோராக வளர்ந்து விட்டது மதுப்பழக்கம்
81 முதல் 89 வரை எட்டு ஆண்டு குடிப்பழக்கம் எட்டாத நிலைக்குப் போனது 1976 தொட்டு 1989 வரைக்கும் பதிமூன்று ஆண்டுகள் பாழாகிப் போனது மதிகெட்ட தமிழர் வாழ்வு கருணாநிதி மட்டும் இல்லை என்றால் இந்நாட்டு கதியென்ன ஆகியிருக்குமோ நெஞ்சம் பதைக்கிறது நேர்மை நாணயம் உள்ளவர்கள்  கொஞ்சமேனும் சிந்திக்கட்டும்

மதுவிலக்குக் கொள்கையில் திமுகழகம் எந்த அளவு ஆழ்ந்த நம்பிக்கைக் கொண்டிருந்தது என்பதை “மதுவிலக்கு மகாத்மியம்” பதிவில்  என்ற   1989 ல் திரு கிருஷ்ணசாமி பாரதி அவர்கள் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவில் இடம் பெற்ற உறுப்பினர்கள் பெயர்களை குறிப்பிட்டு இருந்தேன்.
1971 ல் கழகப் பொருளாளராக இருந்த புரட்சி நடிகர் எம்ஜிஆர் அவர்களின் தலைமையில் திமுக அமைத்த மதுவிலக்குப் பிரச்சாரக் குழுவில் இடம்பெற்ற உறுப்பினர்கள் யார் யார் என்பதை இப்போது காணவும்:
குழுவின் தலைவர் கழகப் பொருளாளர் எம்ஜிஆர் உறுப்பினர்கள்
1.மதுரை முத்து எம்.எல்.சி
2.மேயர் சா.கணேசன்
3.நடிகமணி.டி.வி.நாராயணசாமி எம்.எல்.சி
4.சி.வி.எம்.அண்ணாமலை எம்.எல்.ஏ (அண்ணாவின் பால்ய நண்பர்)
5.சுப்ரவேலு எம்.பி
6.நாகூர் அனீபா எம்.எல்.சி
7.பொற்செல்வி இளமுருகு
8 தமிழரசி .பி.ஏ
9.எல்.கணேசன் எம்.எல்.ஏ

திமுகழகத்தின் மீதான பல அவதூறு குற்றச்சாட்டுகளில் ஒன்று 1971-ல் மதுவிலக்கு தளர்த்தப்பட்டது என்பது...... ஏன் அன்று தளர்த்தப்பட்டது.. காரணங்கள் என்ன..? எவ்வளவு ஆண்டு காலம் இருந்தது.. எப்படி நடைமுறை படுத்தப்பட்டது என்பதெல்லாம் தெரியாமல் கலைஞரை குற்றம் சுமத்தி வந்தனர். மதுக் குடி பழக்கம் இல்லாத நாடுகளே கிடையாது.. சில குறிப்பிட்ட இசுலாமிய நாடுகளைத் தவிர பெரும்பாலும் எல்லா நாடுகளிலும் மதுக்குடி அனுமதிக்கப்பட்டே இருக்கிறது. ஆனால் தமிழ்நாட்டின் இன்றைய கேடுகெட்ட நிலைமைக்கு காரண கர்த்தாக்கள் 13 ஆண்டுகாலம் தொடர்ந்து ஆண்ட எம்ஜிஆர் மற்றும் ஐந்தாண்டு இடைவெளியில் 1991 லிருந்து 15 ஆண்டுகாலம் பரிபாலித்த அம்மையார் ஜெயலலிதா இருவருமே.....
டாக்டர் சுசிலா நய்யார் என்று ஒரு காங்கிரஸ்காரர் இருந்தார். அந்த அம்மையார் அகில இந்திய மதுவிலக்கு கவுன்சிலின் தலைவராக இருந்தவர். 1960 களில் காங்கிரஸ் கட்சி ஆண்ட மாநிலங்களில் எல்லாம் அவர்களுடைய ஆதர்ச புருசரான காந்தியாரின் உயிர் கொள்கையான மதுவிலக்கை கைவிட்டக் காலகட்டம். அப்போது மத்திய அரசு நியமித்த டேக்சிங் கமிட்டி அகில இந்திய அளவில் காந்தி நூற்றாண்டுக்குள்ளாக மதுவிலக்கை அமுல்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தி இருந்தது.

காங்கிரஸ் ஆளும் மாநில முதல்வர்கள் எல்லாம் மதுவிலக்கு கொள்கை அளவில் சரி என்றாலும் நடைமுறை சாத்தியம் இல்லை என்று சொல்லி வந்தனர். குஜராத்திலும் தமிழ்நாட்டிலும் மட்டும் மதுவிலக்கு அமுலில் இருந்தது. அண்ணா தமிழக முதல்வர். மதுவிலக்கினால் ஏற்படும் இழப்புக்கு மத்திய அரசு ஈடுகட்ட வேண்டும் என்று கோரிக்கை இருந்தது. மத்திய அரசு அதற்கு சம்மதிக்காதிருந்தது.

அந்த சமயத்தில்தான் கோவாவில் பானாஜி நகரில் அகில இந்திய கங்கிரஸ் கமிட்டி மாநாடு நடந்தது. அங்கே இந்த டாக்டர் சுசிலா நய்யார் ஒரு தீர்மானம் கொண்டு வருகிறார். டேக்சிங் கமிட்டியின் பரிந்துரைப்படி 1969 காந்தி நூற்றாண்டுக்குள்ளாக இந்தியா முழுதும் மதுவிலக்கு கொண்டு வர வேண்டும் என்று தீர்மானம் கொண்டுவந்தார். ஆனால் அந்த தீர்மானம் ஏற்றுக் கொள்ளாமல் சமரச மாற்றுத் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டது.

அந்த தீர்மானத்தை கொண்டு வந்தவர் யார் அந்த தீர்மானம் என்ன தெரியுமா? கொண்டு வந்தவர் தமிழ்நாட்டு சி.சுப்பிரமணியம் அவர்கள். தீர்மானம் உடனடியாக முழு மதுவிலக்கு அகில இந்திய அளவில் நடைமுறை சாத்தியமில்லை. ஆதலால் காந்தி நூற்றாண்டு காலத்தில் இருந்து ஏழு ஆண்டுகளில் படிப்படியான நடவடிக்கைகளின் மூலம் பூரண மது விலக்கு நிலையை அடைய வேண்டும் என்பதாகும்.

திரு காமராஜர் தலைவராக இருந்த காங்கிரஸ் 1968 ல் இப்படி தீர்மானம் இயற்றியது. இது மட்டும் அல்ல காங்கிரசின் இலட்சணம். அப்போது மது விலக்கினால் வருவாய் இழந்தும் கோவை சென்னை நகரங்களில் படிஅரிசி திட்டம் மற்றும் ரேசன் அரிசி வினியோகத்திற்கும் மத்திய அரசின் அதிகபடியான நிதி ஒதுக்கீடு முதல்வர் அண்ணா அவர்கள் கேட்டு இருந்த சமயம் அது.

இந்த பானஜி காங்கிரஸ் கமிட்டியில் தமிழ்நாட்டு காங்கிரசார் திரு வினாயகம் போன்றவர்கள் பேசியது என்ன தெரியுமா? தமிழ்நாட்டிற்கு நிதி ஒதுக்கீடு அதிகம் தேவை இல்லை. தமிழ்நாட்டில் மதுவிலக்கு ஒன்றும் பிரமாதமான வெற்றி அல்ல. டாக்டர் சுசீலா நய்யார் தமிழ்நாட்டு அரசை தலைமீது வைத்து கொண்டாட தேவை இல்லை என்று காமரசரின் சீடர் திரு வினாயகம் பேசியது குறிப்பிடத்தக்கது.

இப்படி எல்லாம் நான் கமிட்டியில் பேசினேன் என்று அவரே பல கூட்டங்களில் சொல்லி இருக்கிறார். இதெல்லாம் அந்த கால நவசக்தி நாத்திகம் பத்திரிகைகளில் செய்தியாக வந்தது.

அண்ணா முதல்வராக இருந்தபோது அகில இந்திய மதுவிலக்கு மாநாடு சென்னையில் நடந்தது. அண்ணாதான் துவக்கி வைத்தார். இதே டாக்டர் சுசிலா நய்யார், இராஜஜி, காமரஜர், பக்தவத்சலம், காயிதே மில்லத் எல்லாம் கலந்து கொண்டனர். அப்போது அண்ணா சொன்னார் எவ்வளவு கோடி நஷ்டம் ஆனாலும் மதுவிலக்கை அமுல் படுத்தியே தீர்வேன்என்று

அதே நேரத்தில் வேறொன்றும் சொன்னார் புலிகளுக்கிடையே சிக்கிய புள்ளிமானாக தமிழகம் இந்த விஷயத்தில் இன்னும் எத்தனை காலங்கள் இருக்கும் என்பது தெரியாதுஎன்று.

அவருக்குப் பிறகு கலைஞர் நிதிநிலை சமாளிக்க முடியாத அளவு போனபொது மத்திய அரசின் நிதி ஆதாரமும் இல்லாத சூழலில் 21 கோடி ரூபாய் சம்பள கமிஷனுக்கு செல்லுத்துவதற்கும் நெருக்கடியான சந்தர்ப்பத்தில் 1971 ல் மதுவிலக்கை ஒத்தி வைத்தார்.

காங்கிரஸ் பானாஜி கமிட்டியில் சொன்னது போல ஏழு ஆண்டுகளில் அகில இந்திய ரீதியில் மதுவிலக்கு வரும் என்ற எதிர்பார்ப்பிலும் மத்திய அரசின் நிதி கிடைக்கும் என்ற எண்ணத்திலும் 1974ல் மீண்டும் மதுவிலக்கை கொண்டு வந்தார் என்பதுதான் உண்மை வரலாறு.

இதை திமுகழகத்தினர் மக்களிடம் கொண்டு செல்வதற்கும் சொல்வதற்குமான நல் வாய்ப்பை தலைவர் கலைஞர் அவர்கள் ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கு அமுல்என்ற அறிக்கை மூலம் ஏற்படுத்தி தந்ததாகக் கருதியே பல விவரங்களை தொடர்ந்து 2௦16 தேர்தல் சமயம்  முகநூலில் எழுதி வந்தேன். மதுவிலக்கு மகாத்மியம் என்னும் பதிவின் தொடர்ச்சியாக  அவற்றை சிறு மாற்றங்களுடன் இந்த பதிவை செய்திருக்கிறேன்.

மனமே..! மனமே..!

‘‘இயம நியமமே எண்ணிலா ஆசனம்
நயமுறு பிராணாயாமம் பிரத்தியா காரம்
சயமிகு தாரணை தியானம் சமாதி
அயமுறும் அட்டாங்க மாவது மாமே.
( திருமூலர் – திருமந்திரம்.10 பா.542)
இந்த திருமந்திரப் பாடல் வரிசைப்படுத்தும் எட்டு வகை நிலைகள் தான் யோகா என்பது.
இதில் மூன்று நான்கு ஏழு நிலைகளில் இருக்கும் ஆசனம் பிராணாயாமம் தியானம் என்னும் மூன்று மட்டுமே இக்காலத்தில் பலராலும் முதன்மைப் படுத்தப்பட்டு பயிற்சி கொடுப்பதாகச் சொல்லி கடை விரித்து சிலர் காசு பார்க்கிறார்கள்.
ஒருவர் தன் வாழ்க்கையில் என்ன என்ன செய்யக் கூடாது அல்லது செய்ய வேண்டும் என்பதனை அறிந்து நடப்பதே இயமம் நியமம். முதலில் இதனை அறிந்து அதை கடைப் பிடித்தாலே வாழ்க்கை சிறப்பாக அமையும்.
இயமம் - உடையாமை- தீமை அகற்றல் - தகாதன
நியமம் - உடைமை - நன்று ஆற்றல் - தக்கன
மின்சார மின்னணு சாதனங்கள் வாங்கும் போது அதனுடன் தரப்படும் Instruction Manual-ல் . DONTS என்ற தலைப்பில் சில குறிப்புகளைத் தந்து இவைகளை செய்தால் இந்த சாதனம் வேலை செய்யாது, கெட்டு போகும், ஆபத்தானது என்றெல்லாம் எச்சரிக்கை இருக்கும்.
வாழ்க்கையில் இப்படி செய்யக் கூடாத பல செயல்கள் DONTS உள்ளன. அவைகளைக் கடைப் பிடிக்க வேண்டியது முதன்மையானது. அதுவே இயமம்.
அடுத்தது நியமம் என்னும் DOS. இன்னின்ன செய்தால் நல்லது நன்மை பயக்கும் என்பதாகும்.
திருக்குறளில் இந்த DONTS and DOS பட்டியல் உண்டு. உலகில் உள்ள மானிடர் யாவரும் இவைகளைக் கடைபிடித்து வாழ்வார்களாயின் உலகில் அமைதி தவழும். ஆனந்தம் மேலிடும். எல்லோரும் இன்புற்று வாழ்வர்.
திருக்குறளில் குறிப்பிடப்படும் DOS நியமம் என்னும் உடைமைப் பட்டியல்:
அன்புடைமை
அடக்கமுடைமை
ஒழுக்கமுடைமை
பொறையுடைமை
அருளுடைமை
அறிவுடைமை
ஊக்கமுடைமை
ஆள்வினையுடைமை
பண்புடைமை
நாணுடைமை
திருக்குறளில் குறிக்கப்படும் DONTS இயமம் என்னும் உடையாமைப் பட்டியல்:
பிறனில் விழையாமை
அழுக்காறாமை
வெஃகாமை
புறங்கூறாமை
பயனிலசொல்லாமை
கள்ளாமை
வெகுளாமை
இன்னாசெய்யாமை
கொல்லாமை
கல்லாமை
சிற்றினம் சேராமை
பொச்சாவாமை
வெருவந்த செய்யாமை
இடுக்கணழியாமை
அவையஞ்சாமை
பெரியாரைப் பிழையாமை
கள்ளுண்ணாமை
செயத்தக்கனவை விட செயக்கூடாதன கூடுதலாக இருப்பதைக் காண்க. இவைகளில் சிலவற்றையேனும் நாம் வாழ்வில் கடைபிடிக்க முயல்வது நமக்கும் நம் வீட்டுக்கும் நாட்டுக்கும் நலமாகும்.
யோகா என்பது வெறும் உடல் சார்ந்த ஆசனம் பிராணாயாமம் மட்டும் அல்ல. மனம் சார்ந்த தியானமும் சேர்ந்ததே ஆனாலும் மனம் செம்மை அடைவதற்கு இயம நியமங்களை அறிந்து அதன்படி நடக்காத வரையில் யோகத்தின் பயன் யாதுமிலாமல் போகும்.
”மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டாம்
மனமது செம்மையானால் வாசியை நிறுத்த வேண்டாம்
மனமது செம்மையானால் வாயுவை உயர்த்த வேண்டாம்
மனமது செம்மையானால் மற்றதும் செம்மையாமே..”
திருமூலர்தான் திருமந்திரத்தில் இதையும் சொல்லி இருக்கிறார். .. மிக எளிய தமிழில் பாமரருக்கும் விளங்கும் இந்த பாடல் வரிகளுக்கு பெரிய விளக்கம் தேவை இல்லை.
மனதை செம்மையாக்கி மனிதனாவோம்.

Thursday, April 27, 2017

அண்ணன் சொன்னது அதில் அர்த்தம் உள்ளது

திருவள்ளுவருக்கும் திமுகழகத்துக்கும் உள்ள நெஞ்சார்ந்த நெருக்கம் பலருக்கு நெருடலாக இருந்து இருக்கிறது. பாடபுத்தகத்தின் அட்டையில் இருந்த  திருவள்ளுவர் படத்தை “ஸ்டிக்கர்” ஒட்டி மறைத்த வரலாற்று நிகழ்வை  எல்லாம் மறக்க முடியுமா?. 

திருவள்ளுவரையும் திருக்குறளையும் பாமரமக்களிடம் கொண்டு சேர்த்த பெருமை திராவிட இயக்கத்துக்கு உண்டு. பண்டிதர்களிடம் மட்டும் பழக்கத்தில் இருந்த குறளை பட்டிதொட்டி எங்கும் பரவச் செய்ததில் பெரும்பங்கு வகிப்பது திராவிட இயக்கமே திமுகழகமே என்றால் மிகை அல்ல.

அறிஞர் அண்ணா அவர்கள் முதல்வராக ஆனபிறகுதான் தலைமைச் செயலகத்தில் திருவள்ளுவர் படம் இடம் பெறுகிறது. சென்னை - கோட்டை தலைமைச் செயலகத்தில் சூன் 9, 1967 நிகழ்ந்த அந்த திருவள்ளுவர் படத் திறப்பு விழாவில் பேரறிஞர் அண்ணா ஆற்றிய உரை. நம் நாடு நாளிதழில் 10.06.1967 அன்று வெளியானது 
  
“திருவள்ளுவர் - நமக்கு அளித்துள்ள திருக்குறள் இப்போது ஒவ்வொருவருடைய நாவிலும் - நெஞ்சிலும் - நினைவிலும் - இடம் பெற்றிருக்கிறது. எல்லாரும் குறளை ஆதரிக்கிறார்கள்; போற்றுகிறார்கள்.
திருவள்ளுவர் தமிழகத்திற்கு மட்டும் அல்லாமல், வையகம் முழுமைக்கும் வாழ்க்கைக்கு உரிய நெறியைத் தந்திருக்கிறார். அதனை நாம் உலகத்தின் பொதுச்சொத்து என்று எண்ணத் தக்க விதத்தில் பொதுக் கருத்தைப் பரப்பவேண்டும்.

தமிழ் மக்கள் திருக்குறளைப் பொதுமறை என்றும், இன்றைய தமிழர்கள் பெற்ற புதுமறை என்றும் போற்றுகிறார்கள். இந்த நல்ல கருத்துக் கருவூலத்தை உலகத்தின் கவனத்திற்கு எடுத்துவைக்க நல்ல சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது.

அடுத்த ஆண்டு (1968) உலகத் தமிழ் மாநாடு சென்னை நகரத்திலே நடைபெறவிருக்கிறது. தமிழ் ஆய்ந்த - தமிழ் அறிந்த - நல்லறிஞர்கள், பல நாடுகளிலிருந்தும் மாநாட்டுக்கு எனத் தமிழகத்துக்கு வர இருக்கிறார்கள்.
அப்போது திருக்குறளின் அருமை பெருமைகளை, ஏற்கெனவே தமிழறிஞர்கள் அறிந்திருந்தாலும், பத்து நாட்களோ எட்டு நாட்களோ மாநாடு நடைபெறும் நாட்களில், அவர்கள் எல்லாரும் கண்டுகளிக்கத்தக்க விதத்தில் திருக்குறளின் பெருமையை உலகு அறியச் செய்ய வேண்டும்.
திருக்குறளின் - தமிழ் இலக்கியங்களின் கருத்துக்களை, ஓவியங்களாக - வரி வடிவங்களாக - பாடல்களாக - கூத்தாக உருவாக்கி வெளிப்படுத்தும் முயற்சியில் ஈடுபடவேண்டும்.

எனக்குள்ள நீண்ட நாளைய ஆசை - சென்னை கடற்கரை ஓரத்தில் சிலப்பதிகாரத்தில் சித்தரிக்கப்பட்டுள்ள காவிரிப்பூம்பட்டினக் கடற்கரையைப்போல் சித்திரித்துக் காட்டவேண்டும் - உருவாக்கிக் காட்டவேண்டும் என்பது!”

அண்ணாவின் ஆசையை அவரின் எண்ணங்களை அப்படியே ஏற்று அவருக்குப் பிறகு முதல்வராக பொறுப்பேற்ற கலைஞர் திருக்குறளின் பெருமையை உலகறியச் செய்யும் வகையில் சென்னையில் வள்ளுவர் கோட்டம் குமரியில் வானுயர் சிலை என பல திட்டங்களை நிறைவேற்றினார், அண்ணாவின் உரையில் குறிப்பிட்ட சிலப்பதிகார சித்திரங்களையும் பூம்புகாரில் அமைத்தார்.
அண்ணா முதல்வராக இருந்தபோது சென்னையில் நடைபெற்ற உலகத் தமிழ் மாநாட்டின் போது சென்னைக் கடற்கரையில் வள்ளுவருக்கு சிலை வைக்கப்பட்டது. அப்போது பொதுப்பணித் துறை அமைச்சராக இருந்த கலைஞர் அரசு போக்குவரத்து பேருந்துகளில் திருவள்ளுவர் படமும்  திருக்குறளும் இடம் பெறச் செய்தார்.

அப்போது அதுவும் சர்ச்சைக்கு உள்ளாக்கப்பட்டது. அந்த காலத்தில் இருந்தே திருவள்ளுவரை திமுகழகத்தவராகவே கருதும்படியாக நேரிட்டுவிட்டது பலருக்கு. கலைவாணர்  “தினா முனா கனா  திருக்குறள் முன்னணி கழகம்“ என்ற பாடலை  5௦ களிலேயே பாடிவிட்டார்.    

திருவள்ளுவர் படமும், திருக்குறளும் பேருந்தில் இடம்பெற்றதைக் கேலி செய்து எதிர்க்கட்சியினர் பேசினார்.
ஒரு முறை சட்டமன்றத்திலேயே எதிர்க் கட்சி உறுப்பினர் ஒருவர் புத்திசாலித்தனமாக ஒரு கேள்வியைக் கேட்டார்.
பேருந்தில் “யாகாவாராயினும் நாகாக்க காவாக்கால் சோகாப்பர் சொல்லிழுக்குப்பட்டு” என்று குறிக்கப்பட்டுள்ள குறள் யாருக்காக? டிரைவருக்காகவா? கண்டக்டருக்காகவா? பிரயாணம் செய்கின்ற பொதுமக்களுக்காகவாஇதற்கு என்ன பதில் சொல்லமுடியும். அண்ணாவுக்கு இக்கட்டான நிலை உருவாக்க இட்டுக் கட்டப்பட்ட எடக்கான கேள்வி இது.

டிரைவர் கண்டக்டருக்காக என்றால் தொழிளாளர்களின் கோபத்திற்கு ஆளாக வேண்டும். பொதுமக்களுக்காக என்றால் மக்களின் கண்டனத்துக்கு உள்ளாக வேண்டும்.

இந்த கேள்விக்கு அண்ணா கொடுத்த பதில் என்ன தெரியுமா?
“நாக்கு உள்ளவர்கள் எல்லோருக்காகவும் எழுதி வைக்கப்பட்டுள்ளது” இதுதான் பதில்.

அண்ணாவின் சாதுர்யம் அவர் சொன்னதில் இருந்த நுணுக்கமான பொருள் யாவும் கேள்வி கேட்டவரை மட்டுமல்ல, அனைவரையுமே அதிர வைத்தது. அதிசயிக்க வைத்தது.


அண்ணன் சொன்னது அதில் அர்த்தம் உள்ளது 

காலக்கணக்கு - பாகம் 2

சம்ஸ்கிருத புத்தாண்டு என்று சித்திரை முதல் நாளை நம்மவர்கள் சிலர் சொல்வது தவறு என்று குறிப்பிட்டதன் காரணம் என்னவென்றால் மொழியின் அடிப்படையில் புத்தாண்டுகள் துவக்கபடுவதில்லை. குறிப்பிட மொழி பேசும் இனத்தவர்கள் அவரவர் பகுதியில் கொண்டாடும் ஆண்டுத் துவக்கத்தை புத்தாண்டு என்கின்றனர்.

இந்திய துணைக் கண்டத்தில் வசிக்கும் மொழியின மக்களின் புத்தாண்டு விவரம் :

தெலுங்கர்         தெலுகு யுகாதி அல்லது தெலுகு கொத்த சமச்வரம் ,
கன்னடர்           கன்னடயுகாதி,
மணிபுரி           சஜ்பு நோங்மா பண்பா
காஷ்மிரி          நவரே
சிந்தி              சேத்தி சாந்த்
மராட்டியர்         குடி படவா,  
கொங்கண்         குடி படவா
வங்காளி          பஹலே பைசாகி அல்லது பங்காப்தா
ஓடியா            பன சங்கராந்தி ,
பஞ்சாப்           வைசாகி ,
குஜராத்தி          பெஸ்து வரஷ்
இராஜதானியர்     மார்வாரி நயாசால்  
மலையாளம்       விஷு
பீகார்              ஜுடே ஷீத்தல் அல்லது மைதிலி நயாசால்    
அசாம்            ரோங்காலி பிஹு அல்லது ரோஹாக் பிஹு  
திரிபுரா            திரிபுரப்தா


இவர்களில் தெலுங்கர் கன்னடர் மணிபுரி காஷ்மிரி சிந்தி மராட்டி கொங்கண் மொழியின மக்கள் சந்திர சுழற்சி முறையின் படி மார்ச் அல்லது ஏப்ரல் மாதம் வெவ்வேறு தேதிகளில் வித்தியாசப்பட்ட நாட்கணக்கில் வரும் புத்தாண்டு கொண்டாடுவர். சித்திரை அவர்களுக்கு முதல் மாதம்.

குஜராத்தியரும் ராஜஸ்தானியரும் அதே சந்திர சுழற்சி முறை பிரகாரம் அக்டோபர் அல்லது நவம்பர் மாதங்களில்  வெவ்வேறு தேதிகளில் வித்தியாசப்பட்ட நாட்கணக்கில் வரும் புத்தாண்டை கொண்டாடுவர். கார்த்திகை அவர்களுக்கு முதல் மாதம்.  

மற்ற அனைவருக்கும் சூரிய சுழற்சி முறைப்படி ஏப்ரல் மாதம் 13/14/15 தேதிகளில் குறிப்பிட்ட நாளில் ஒரே நாட்கணக்கில் வரும் புத்தாண்டை கொண்டாடுவர். அது சித்திரை முதல் மாதம் ஆகும்.

நிலைமை இப்படி இருக்க சஸ்கிருத புத்தாண்டு என்ற ஒன்று  எங்கிருந்து வந்தது. அப்படி ஒரு புத்தாண்டு எப்போதும் இருந்ததில்லை. நாமே எதோ காரணத்திற்காக அதை உருவாக்குவது நல்லது அல்ல.

தமிழர்கள் புத்தாண்டு துவக்கம் சித்திரை மாதமா  அல்லது தை மாதமா என்பதுதான் நம்மில் உள்ள கேள்வி.

தமிழ் அறிஞர்கள்  தை மாத துவக்கமே என்று சொல்கின்றனர். நம் நினைவு தெரிந்த நாளில் இருந்து சித்திரையை துவக்க மாதமாக கொண்டாடி வருகிறோம். அது எப்போதிருந்து என்று தெரியாது. நாயக்கர் காலத்தில் இருந்து நடைமுறைக்கு வந்ததாக சிலர் சொல்வர். அப்படி இருந்தால் அதுவரை தமிழர் புத்தாண்டு கொண்டாட்டம் இல்லாமல் இருந்தால்  யுகாதி தான் தமிழருக்கும் புத்தாண்டாக இருந்து இருக்க வேண்டும். யுகாதி சந்திரமான முறையைக் கொண்டது. தமிழர் புத்தாண்டோ சூரியமான முறையைக் கொண்டது.  ஆகவே அதனை மாற்ற  முடியாமல் போய் இருக்கலாம். ஆனால் அப்போதும் சித்திரைதான் முதல் மாதமாக இருந்ததா அல்லது வேறு மாதம் ஏதாவது இருந்ததா என்பதை பார்க்க வேண்டும்.

தமிழ் அறிஞர்கள் சித்திரை முதல் மாதமாக இல்லை தை முதல் நாள்தான் புத்தாண்டு துவக்கம் என்று ஆய்ந்து அறிந்து சொல்கின்றனர். ஆகவே நாம் தை முதல் நாளான பொங்கல் திருநாளை தமிழரின் புத்தாண்டாக கொண்டாடுவதே சிறப்பாகும்.


இது நாள் வரை சித்திரைதானே இருந்தது எதற்கு அதை மாற்ற வேண்டும் என்ற வினாவிற்கு நல்ல பல காரணங்களை விளக்கி சொல்லலாம்.     

Tuesday, April 25, 2017

காலக்கணக்கு - பாகம் 1

சித்திரை முதல் தேதியன்று தமிழ் புத்தாண்டு வாழ்த்து என்றும் சமசுகிருத புத்தாண்டு வாழ்த்து என்றும் அவரவர் கருத்துக்கும் எண்ணத்திற்கும் ஏற்ப வாழ்த்து சொல்வதைக் காண்கிறோம்.

உண்மையில் புத்தாண்டு என்பது என்ன? ஓர் ஆண்டு காலம் என்பது என்ன? ஒவ்வொரு நாட்டுக்கும் மொழிக்கும் வேறு வேறு ஆண்டுத் துவக்கம் இருக்க முடியுமா? தமிழ் புத்தாண்டு என்றும் சமஸ்கிருத புத்தாண்டு என்றும் சொல்வதில் பொருள் உள்ளதா என்று நாம் சிந்திக்க வேண்டி இருக்கிறது.

காலக்கணக்கில் பல தப்பும் ஒப்பும் விரவிக் கிடக்கின்றன. காலந்தோறும் அவைகள் சரி செய்யப்பட்டு தரப்படுத்தப்பட்டு காலக்கணக்கு முறைகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன.
இப்போது நடைமுறையில் நாம் கொண்டிருக்கும் கால அளவைகள்.நொடி (second) நிமிடம் (minute) மணி (hour) நாள் (day) வாரம் (week) பக்கம் அல்லது இருவாரம் (fortnight) மாதம் (month) ஆண்டு (year)  என்பனவாகும்.

ஆண்டு என்பது என்ன? சூரியனை பூமி ஒருமுறை சுற்றிவரும் காலம் என்பர். அது 365 ¼  நாள் என்று கணக்கிடப்பட்டுள்ளது

நாள் என்பது என்ன?  பூமி தன்னைத்தானே ஒருமுறை சுற்றிக்கொள்ளும் காலம். அது சூரியன் காலையில் உதித்து பகலில் உச்சிக்கு சென்று மாலையில் மறைந்து இரவில் காணாமல் மீண்டும் காலையில் உதிக்கும் காலம் வரை ஒரு நாள் எனப்படுகிறது.

மாதம் என்றால் சந்திரன் பூமியை ஒருமுறை சுற்ற எடுத்துக் கொள்ளும் 3௦ நாட்கள் கொண்ட காலநேரம்.   அது தேய்பிறை 15 நாட்கள் கொண்ட இருட்பக்கம் (கிருஷ்ண பட்சம்)  வளர்பிறை 15 நாட்கள் கொண்ட ஒளிப்பக்கம் (சுக்லபட்சம்) என்று இரு பிரிவுகளாக கொண்டுள்ளது. மதி என்னும் சந்திரனின் இந்த சுழற்சி முறையில் இந்த கால அளவு கணக்கிடப்பட்டதால் மாதம் என்று தமிழில் வழங்கலாயிற்று என்று தமிழ் அறிஞர்கள் சொல்வர். அதுதான் மற்ற மொழிகளில் மாசம் என்றானதாக தெரிகிறது.

வாரம் . மணி. நிமிடம் , நொடி இவைகளுக்கும் சூரிய சந்திரருக்கும் எந்த தொடர்பும் கிடையாது. இவைகள் பிற்காலத்தில் அவரவர் வசதிகளுக்காக இத்தனை நாட்கள் ஒரு வாரம் என்றும், ஒரு நாளுக்கு இத்தனை மணி என்றும் ஒருமணிக்கு இத்தனை நிமிடங்கள்  என்றும் நிமிடத்திற்கு இத்தனை நொடிகள் என்றும் வகுத்துக் கொண்டனர். அவைகள் காலம் தோறும் நாடுகள் தோறும் வேறுபாடுடையதாக இருந்து இருக்கறது. இப்போது நம் வழக்கத்தில் உள்ள வாரம் மணி நிமிடம் நொடி கணக்குகள் உலகம் முழுதும் பின்பற்றப் படுகிறது. இதற்குக் காரணம் ஆங்கிலேயர்கள் அவர்கள் ஆளுமைக்கு உட்பட்ட நாடுகளில் இந்த கால நேரத்தை தரப்படுத்தியதால் ஆகும். அதன் பயன் கருதி எல்லா நாடுகளும் அந்த முறையை பின் பற்றத் தொடங்கிவிட்டார்கள்.
 
தமிழகத்தில் ஒரு நாளுக்கு இத்தனை  நொடி நாழிகை பொழுது சாமம் என்று ஒரு கணக்கு இருந்தது. இப்போது அது வழக்கற்று போய்விட்டது. இப்படிதான் பல்வேறு நாட்டிலும் வெவ்வேறு வகையிலான காலக் கணித முறை இருந்து இருக்கும். ஆனால் இப்போது உலக முழுதும் ஆங்கிலேயரால் வழங்கப்பட்ட காலமுறையே பின்பற்றப் படுவதாகத் தெரிகிறது. நாள் என்பது இந்திய / தமிழக முறைப்படி சூரிய உதயத்திலிருந்து தொடங்கவேண்டும். ஆனால் நடுநிசி 12 மணிக்கு நாள் துவக்கம் தேதி மாற்றம்  ஆகிற முறைதான் உலகமுழுதும் பின்பற்றப் படுகிறது.

ஆங்கிலேயரின் Greenwich Mean Time (GMT) என்று சொல்லப்படும் இந்த முறை இப்போது  Coordinated Universal Time (UTC) என்று அறியப்படுகிறது. Indian Standard Time (IST) க்கும் GMTக்கும் உள்ள வித்தியாசம் +5.3௦ மணிநேரம் ஆகும். அதாவது IST நேரம் GMT நேரத்திற்கு 5.3௦ மணி நேரம் முந்தியதாக கருதப்படும். 

இந்தியாவில் ஆண்டு காலக்கணக்கு சூரியசுழற்சி சந்திரசுழற்சி இரண்டு  முறைகளிலும் கணக்கிடப்பட்டு இருக்கிறது. முதலில் சந்திர சுழற்சி முறைதான் இருந்திருக்க வேண்டும். ஒவ்வொரு நாளும் சந்திரனில் காணப்படும் மாற்றம் தேய்வதும் வளர்வதும் இருள்மயம் ஆவதும் முழுநிலவாவதும் அவைகள் எல்லாம் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் நிகழ்வதும் எந்த ஒரு சாதாரண  மனிதனும் காணக்கிடைக்கும் தகவலாகும். இதை அறிந்துகொள்ள பெரிய ஆராய்சி அறிவு தேவையில்லை. ஆதலால் மனிதகுலம் எப்பகுதியை சார்ந்தவரானாலும் நாளையும் மாதத்தையும் சந்திர சுழற்சி முறையிலேயே கணக்கிட்டு இருப்பார்.

அதற்குப் பிறகுதான் சூரிய சுழற்சி முறையை அறிந்து  ஆண்டு கணக்கு வந்திருக்க வேண்டும். ஒவ்வொரு நாளும் சூரியன் எழும் விழும் காலம் இடம் இவைகளில் சிறு சிறு மாற்றங்கள் நிகழ்வதை சாதாரணமாக வெற்றுக் கண் கொண்டு கண்டறிவது அரிதாகும். சூரிய சுழற்சி முறையை  ஆராய்ச்சிக் கண் கொண்டு பார்த்தால்தான் விளங்கும். அப்படிப்பட்ட ஆராய்ச்சி நிலையை மனிதகுலம் அடைவதற்கு பலகாலம் தேவைப்பட்டு இருக்கும். முதலில் சூரியன்தான் பூமியை சுற்றி வருவதாகவும் கருதினர். அதன்படி ஒருகுறிப்பிட்ட கால அளவையில் சுற்றி வருவதையும் அறிந்தனர். அதை ஆண்டு என்றும் வருடம் என்றும் அளவிட்டனர். ஆண்டுக்கு எத்தனை நாட்கள் ஆகிறது என கணக்கிட்டு 365 1/4 நாட்கள் என அறிந்தனர். இந்த சூரிய சுழற்சி முறையைத்தான் உலகநாடுகளில் பெரும்பாலானோர் ஆண்டு கணக்கில் பயன் படுத்துகின்றனர்.

இந்தியாவில் சந்திர சுழற்சி முறை (சந்திரமானம்) பிரகாரம் ஆண்டுக் கணக்கு வைத்துக் கொண்டு புத்தாண்டு கொண்டாடுபவர்கள் இந்தியாவில் தெலுங்கர், கன்னடர், மராட்டியர் ஆவர். தெலுங்கரும் கன்னடரும் புத்தாண்டு துவக்க நாளை யுகாதி என்கின்றனர். மராட்டியர் குடிபடவா என்பர். இந்த துவக்க மாதம்  சைத்ரம் (சித்திரை) ஆகும். 

ஆனால் மலையாளி,  ஒடியா , அசாமி , வங்காளி, பஞ்சாபி ஆகியவர் சூரிய சுழற்சி முறையில் ஆண்டுக் கணக்கு வைத்துக்  கொண்டு உள்ளனர். சித்திரை மாதம்தான் இவர்களுக்கும்  முதல் மாதம். 

குஜராத்தியரும்  சூரிய சுழற்சி முறையையே  ஆண்டு கணக்காக  வைத்து இருந்த போதும் ஆண்டுத் துவக்கமாக கார்த்திகை மாதத்தை கொண்டுள்ளனர். 

தமிழர்கள் இதுகாறும் சூரிய சுழற்சி முறையில் சித்திரை மாதத் துவக்கத்தைக் கொண்டு புத்தாண்டை கொண்டாடி வந்தது தெரிந்ததே. 

அதன் படியாக சித்திரை முதல் தேதி எப்போதும் ஏப்ரல் பாதம் 14 ஆம் நாள் வரும். நான்காண்டுக்கு ஒருமுறை 15 ஆம் தேதி வரும். தை முதல் நாளின் பொங்கல் திருநாள் இப்படிதான் ஜனவரி 14 / 15   தேதிகளில் வருவதை அறியலாம். இங்கு நாம் கவனிக்க வேண்டியது சம்ஸ்கிருத ஆண்டு என்று ஒன்று இல்லை என்பதை ஆகும். 

ஆனால் மாதத்தின் பெயர்கள் சமஸ்கிருதத்தில் இருப்பதை காணலாம். அதனாலேயே சம்ஸ்கிருத புத்தாண்டு என்று சித்திரை முதல் நாளின் போது நம்மவர் சிலர் சொல்வது தவறானது என்பதை அறியவேண்டும்.


யுகாதி என்னும் சந்திர சுழற்சி முறையில் கொண்டாடப்படும் புது வருடப்பிறப்பு இதுபோல் ஒரு குறிப்பிட்ட நாளில் அதாவது 365 நாட்களுக்கு ஒருமுறை வருவது இல்லை. 2013 லிருந்து 2018 வரை யுகாதி எனப்படும் புதுவருடம் 354, 355, 383, 347, 354 நாட்கள் இடைவெளியில் பிறக்கிறது. 

இதைப் போலதான் வடநாட்டில் கொண்டாடப்படும் ஹோலி பண்டிகை 2௦1௦ லிருந்து 2௦18 வரை 383, 354, 384, 355, 354, 383, 354, 354  நாட்கள் இடைவெளியில் கொண்டாடப்படுகிறது. ஆண்டுத் துவக்கமோ அல்லது வசந்தகாலத் துவக்கம் என சொல்லப்படுகிற ஹோலிப் பண்டிகையோ குறிப்பிட்ட நாட்கள் இடைவெளியில் இல்லாததை காணமுடிகிறது. 

ஆண்டுக்கு 12 மாதங்கள் என்ற கணக்கில் மாதத்திற்கு அம்மாவசை முதல் அடுத்த அம்மாவசை வரை 3௦ நாட்கள் வீதம் ஆண்டுக்கு 36௦ நாட்கள் என்றால் ஓரளவு புரிந்து கொண்டு ஏற்க இயலும். சந்திரமான முறைப்படி ஆண்டுகள் இப்படியாக வெவ்வேறு எண்ணிக்கையில் வருவது ஏற்கலாகுமா? ஏன் இவ்விதம் வகுத்துள்ளனர்  என்பதை அறிய வேண்டும்.