Thursday, June 9, 2016

தீர்க்கதரிசி - நேரத்தைப் பற்றி

நேரத்தைப் பற்றி
வானியல் அறிஞர் ஒருவர்
ஆசானே நேரத்தைப் பற்றி கூறுங்கள் என்றார்
அவர் பதில் சொன்னார்

நேரம் அளவற்றது அளவிடமுடியாதது
மணிப்பொழுதுக்கும் பருவகாலத்துக்கும் ஏற்ப
உங்கள் உயிர்மையை வழிநடத்த உங்களை
தகவு அமைத்துக் கொள்கிறீர்

நேரம் என்பது ஓடையைப் போன்றது
நீங்கள் அதன் ஓரத்தில் அமர்ந்து
அதன் ஓட்டத்தை காண்கிறீர்

முடிவில்லா உங்கள் உள்ளம்  
வாழ்க்கையின் அழிவின்மியை அறியட்டும்
நேற்று என்பது இன்றைய நினைவு
நாளை என்பது இன்றைய கனவு

வான்வெளியில் விண்மீன்களை இரைத்து
அதன் எல்லைகளுக்குள் வாழ்கிற காலநேரம்
உங்களுக்குள் பாடிக்கொண்டே திட்டமிடுகிறது

நேரத்தின் அளவற்ற அன்புகாட்டும் ஆற்றலை
உணராதவர் உங்களில் யார் உளர்?

நேரத்தின் மையத்தில் அடைபட்ட
அளவற்ற மெய்யான அன்பை
எண்ணத்தின் எண்ணமாகவும்
செயலிலின் செயலாகவும்
உருக்கமில்லாமல் உணராதவர்கள் உங்களில் யார்?

நேரம் பிரிக்கமுடியாத அசையாத அன்பைப் போன்றது அல்லவா?

நேரத்தைப் பருவமாக அளவிட எண்ணினால் 
ஒவ்வொரு பருவமும் மற்ற பருவங்களை வளைக்கும்

கடந்தகால நினைவுகளையும் எதிர்கால விருப்பங்களையும்

இன்றே ஒன்றிணைப்பது நேரம்  

No comments: