Thursday, June 9, 2016

தீர்க்கதரிசி - அழகைப் பற்றி

அழகைப் பற்றி
ஒரு கவிஞர் அழகைப்பற்றி சொல்லுங்கள் என்றதற்கு
அவர் பதில் சொன்னார்

அழகை எங்கெ தேடுவீர்?
அழகே உங்கள் வழியில் வந்து
வழிகாட்டியாக இல்லாமல் போனால்
எப்படி உங்களால் அழகை காணமுடியும்?
அழகு உங்கள் உரையை நெய்பவராக இருந்தாலொழிய
அழகைப் பற்றி எப்படி உங்களால் பேச முடியும்?

தாய்மை பெற்ற பெருமையில் அரை வெட்கத்துடன்
நம்மிடையே உலவும் இளம்பெண் போல்
அழகு இரக்கமானது மென்மையானதுஎன்று
அன்பினால் பாதிக்கப்பட்டவரும் காயம்பட்டவரும் சொல்வர்

அழகு நமக்குக் கீழுள்ள பூமியையும்
மேலுள்ள வானதையும் அசைக்கும்
திகிலூட்டும் வலிமை கொண்டதுஎன்று
உணர்ச்சிவயப்பட்டவர் சொல்வர்

 “அழகு நம் உற்சாகத்திடம் மெலிதாக முணுமுணுக்கிறது.
அந்த குரல் நிழலின் அச்சத்தில் நடுங்கும்
அணையும் விளக்கு போல் அமைதியை அறுவடை செய்கிறது
என்று களைத்து போனவர்களும் அலுத்து போனவ்ர்களும் சொல்வர்

அழகின் உரத்தகுரலை மலைகளில் கேட்டோம்
அழகின் கூக்குரலை குளம்படியிலும் சிறகடித்தலிலும்
சிங்கத்தின் முழக்கத்திலும் சத்தமாக அங்கு வெளிபட்டது: என்று
அமைதியற்றவர் சொல்வர்

இரவுநேர நகரக்காவலன் சொல்வான்
அழகு கிழக்கிலிருந்து விடியலாக எழுகிறதுஎன்று

நண்பகலில் அலைந்த பாட்டளிகளும் வழிப்போக்கர்களும் சொல்வர்
அழகு பூமியின் அந்திநேர சாளரத்தில்
சாய்ந்துகொண்டு இருந்ததை பார்த்தோம்என்று

குளிர் காலத்தில் பனியால் சூழப்பட்டவர் சொல்வர்
அழகு வசந்தத்தில் மலைகளில் குதித்ததையும்
உதிர்காலத்தில் இலைகளுடன் நடனமாடியதையும்
அழகின் கூந்தலில் பனியின் படர்வையும்  கண்டிருக்கிறோம்என்று

அழகைபற்றி இப்படி சொன்னது எல்லாம்
உண்மையில் அழகைப்பற்றி அல்ல ஆனால்
அவைகள் உங்கள் நிறைவேறாத நாட்டங்கள்
அழகு என்பது இன்றியமையானது அல்ல களிப்பானது.

அழகு தாகவிடாய் அல்ல
அழகு உணர்ச்சியூட்டுவது

அழகு
நீண்ட  வெறும் கைகளை அல்ல  
இதயத்தை  கிளர்ச்சியூட்டுவது
உயிர்மையை வயப்படுத்துவது  

அழகு
நீங்கள் பார்க்கும் பிம்பம் அல்ல
நீங்கள் கேட்கும் பாடலும் அல்ல ஆனால்
கண்களை மூடினாலும் காணக்கூடிய உருவம்
காதுகளைப் பொத்தினாலும் கேட்கும் பாடல்

அழகு
மரப்பட்டை வடுக்களில் ஊறும் நீர்சத்து அல்ல
கொக்கியில் மாட்டிக்கொள்ளும்  சிறகுகளும் அல்ல ஆனால்
எப்போதும் பூத்துக் குலுங்கும் தோட்டம்
எப்போதும் பறந்தோடும் அணங்குகள் கூட்டம்

ஆர்பலேஸ் மக்களே
வாழ்க்கை தன் புனிதமுகத்தை திறக்கும்போது
அழகு வாழ்க்கையாகிறது ஆனால்
நீங்கள்தான் வாழ்க்கை
நீங்கள்தான் முகத்திரையும்

அழகு
அழிவில்லாத தன்னை கண்ணாடியில் உற்று நோக்குகிறது
ஆனால்
நீங்கள்தான் அழிவில்லாதவர் நீங்களே கண்ணாடி


No comments: