அதிகாரம் - 110
குறிப்பறிதல் (முகக்குறிகளால் மனத்தை அறிவது)
இருநோக் கிவளுண்கண் உள்ள தொருநோக்கு
நோய்நோக்கொன் றந்நோய் மருந்து
குறள் 1091
இரண்டு கண்கள்
பார்வை ஒன்று
இயற்கை விதி!
இது தானென்றாலும்
கண்கள் இரண்டும்
காட்டும் குறிப்பு
பெண்கள் மட்டும்
பெற்றனர் இரண்டு!
மையிட்ட கண்களால்
மனையாட்டி நோக்கின்
இருவேறு குறிப்பை
ஒரே நேரம் உணர்த்தும்!
ஒரு கண் அம்பு எய்யும்
மறு கண் அன்பை பெய்யும்
ஒன்று வம்பு பேசும்
மற்றது வாஞ்சை காட்டும்
ஒன்று பசியை தூண்டும்
மற்றது புசிக்க அழைக்கும்
ஒன்று வருத்தம் கொடுக்கும்
மற்றது திருத்தம் செய்யும்
ஒன்று நோய் வரவைக்கும்
மற்றது மருந்தினை அளிக்கும்!
No comments:
Post a Comment