Thursday, June 9, 2016

தீர்க்கதரிசி - மகிழ்ச்சியைப் பற்றி

மகிழ்ச்சியைப் பற்றி
ஆண்டுக்கு ஒருமுறை நகரத்திற்கு வரும்  முனிவர் ஒருவர்
மகிழ்ச்சியைப் பற்றி எங்களுக்கு சொல்லுங்கள் என்றார்
அதற்கு அவர் பதில் சொன்னார்

மகிழ்ச்சி என்பது விடுதலைப் பாடல் - ஆனால்
அதுவே விடுதலை அல்ல
மகிழ்ச்சி விருப்பங்களின் மலர்ச்சி ஆனால்
அவைகளின் பழம் அல்ல
மகிழ்ச்சி உயரம் எனப்படும் ஆழம் ஆனால்
அது உயரமானதும் அல்ல ஆழமானதும் அல்ல
மகிழ்ச்சி கூண்டினுள் சிறகு ஆனால்
அது வெற்றுவெளியால் சூழப்படாதது

ஆம் மிக உண்மையில் மகிழ்ச்சி என்பது விடுதலைப் பாடல்தான்
நிறைந்த இதயத்துடன் அதை நீங்கள் பாடும்போது
எனக்கு உவப்பு மேலிடும் ஆனாலும் நீங்கள் உங்கள்
இதயத்தை பாடலில் இழந்துவிடக் கூடாது என்பேன்

உங்களில் சில இளைஞர்
அதுவே எல்லாம் என்று மகிழ்ச்சியை நாடுவர்
அவர்கள் மதிப்பிடப்பட்டு கண்டிக்கப்படுகின்றனர்
நான் மதிப்பிடவோ கண்டிக்கவோ மாட்டேன்
மகிழ்ச்சியை தனியாக நாடாதே என்றுதான் சொல்வேன்

மகிழ்ச்சிக்கு ஏழு உடன்பிறந்தவர்
கடைக்குட்டி மகிழ்ச்சியைவிட அழகானவள்


கிழங்குவேண்டி பூமியைத்  தோண்ட புதையல் கிடைத்ததென்று
நீங்கள் கேள்விப்பட்டதில்லையா?

குடிபோதையில் செய்த தவறுகள் போல்
உங்களில் முதியவர்களுக்கு மகிழ்ச்சியும் வருத்தமும் நினைவிருக்கும்

ஆனால் வருத்தம் மனதின் மேகமூட்டம்தான் வேதனையல்ல
கோடையில் அறுவடை செய்தது போல் அவர்கள்
நன்றியறிதலுடன் மகிழ்ச்சியை நினைத்துப் பார்க்கட்டும்
ஆனாலும் வருத்தப்படுவதே வசதி என்றால் வருத்தப்படட்டும்  

உங்களில் மகிழ்ச்சியை நாடாத இளைஞர் 
நினைத்துப் பார்க்காத முதியவர் 
நாடவும் நினைக்கவும் அஞ்சும் அவர்கள்
மகிழ்ச்சியை மறுதலிக்கிறார்கள் - அந்த அச்சத்தில்
மகிழ்ச்சியின் ஊக்கத்தை தவிர்த்து
மகிழ்ச்சியை புண்படுத்துகிறார்கள்

ஆனால் விட்டுக்கொடுப்பதும்கூட மகிழ்ச்சிதான்

தயக்கத்துடன் கைகளால் கிழங்கு தோண்டுபருக்கும்
புதையல் கிடைகிறதே அதனால் சொல்லுங்கள்
யார் ஊக்கத்தை குன்றச்செய்வர் ?

இரவின் அமைதியை அன்றில் பறவையோ - அல்லது
விண்மீன்களை மின்மினிபூச்சியோ வேதனைப்படுத்துமா?
நெருப்பும் புகையும் காற்றுக்கு பாரமாகுமா?
மகிழ்ச்சி ததும்பும் குட்டையை  
கோலால் குழப்ப முடியுமா?

பெரும்பாலும் உங்கள் மகிழ்ச்சியை நீங்களே மறுதலிகின்றீர்
ஆனல் விருப்பத்தை உங்களுக்கிடையில் சேமித்து வைக்கிறீர்
இன்றைக்கு விலக்கப்பட்டைவை
நாளைக்காக காத்திருப்பது யாருக்குத் தெரியும்

உங்கள் உடலுக்கு அதன் பாரம்பரியமும்
உரிமையுள்ளத் தேவையும் தெரியும்
ஆதலால் மகிழ்ச்சி என்றும் ஏமாறாது

உயிர்மையின் யாழ் உங்கள் உடல்
உங்களின் கடமை அதிலிருந்து இன்னிசை எழுப்புவதா
அல்லது குழப்பமான ஒலியை மீட்டுவதா என்பதே

உங்கள் இதயத்தில் இப்போது கேளுங்கள்
மகிழ்ச்சியில் எது நல்லது எது நல்லதல்ல
என்பதை எப்படி வேறுபடுத்துவது?” என்று

உங்கள் வயலுக்கும் தோட்டத்திற்கும் செல்லுங்கள்
உங்களுக்குப் புரியும் மலரிலிருந்து தேனீக்கள்
தேனை சேகரிப்பதில் அடையும் மகிழ்ச்சியை ஆனால்
மலருக்கும் மகிழ்ச்சியே தேனை தேனீக்கு அள்ளித்தருவதிலே.

தேனீக்கு மலர் வாழ்க்கையின் ஊற்று
மலருக்கோ தேனீ அன்பின் தூதுவன்
தேனீ மலர் இருவருக்கும் தரும் பெரும் மகிழ்ச்சி
தேவையானதும் களிப்பானதும் ஆகும்

ஆர்பலேஸ் மக்களே

மகிழ்ச்சியில் மலராகவும் தேனீயாகவும் இருங்கள்

No comments: