Thursday, June 9, 2016

தீர்க்கதரிசி - நட்பு பற்றி

நட்பு பற்றி
ஒரு இளைஞன் நட்பு பற்றி பேசுங்கள் என்றதும்
அவர் பதிலளித்தார்

உங்கள் நண்பன் உங்கள் தேவைக்கு விடையானவர்

நண்பன் அன்பை விதைத்து
நன்றியுணர்வை அறுவடை செய்யும் நிலம்

நண்பன் பசிக்கும்போது உங்களுக்கு உணவு 
அமைதி தேடும்போது நீங்கள் குளிர்காய கணப்பு

நண்பன் மனந்திறந்து பேசும் போது நீங்கள்
மனதாலும் மறுப்பதில்லை ஏற்காமல் இருப்பதில்லை

நண்பன் அமைதியில் ஆழ்ந்தபோது
அவன் இதயத்குரலைக் கேட்காமல்
உங்கள் இதயக்கதவுகள் மூடிக் கொள்கின்றன

நட்பில் வார்த்தைகள் இல்லை - அதில்
எண்ணங்கள் ஆசைகள் எதிர்பார்ப்புகள் எல்லாம் பிறக்கின்றன,
அவைகள் மகிழ்ச்சியுடன் பகிரப்படுகின்றன
பாரட்டப்படுவதில்லை

நண்பனைப் பிரியும் போது வருத்தம் வேண்டாம்
மலையேறிக்கு சமவெளியிலிருந்து
மலை தெளிவாகத் தெரிவது போல்
நண்பனிடம் எதை அதிகமாக நேசித்தீரோ - அது
களங்கமின்றித்  தெரியும்

நட்பை உயிர்மையின்  ஆழத்தில் 
எதிர்பார்ப்பு ஏதுமில்லாமல் சேமித்து வையுங்கள்

அன்பு அவசியம் வேண்டுமே தவிர
மர்மத்தை வெளியிடும் அன்பாக அல்ல
பிறகது நிகர நடிப்பாகிவிடும்.

ஆதாயம் இல்லாத அன்பு மட்டும் அகப்படும்

உங்களின் உசத்தியானதைப் நண்பனுக்குக் கொடுப்பீர்
உங்களின் இறக்கத்தை தெரியப்படுத்தினால்
உங்கள் ஏற்றமும் தெரியட்டும்

நேரத்தைக் கொல்வதற்கா நண்பனின் தேவை?
நேரத்தோடு வாழ நண்பனைத் தேடுவீர்

தேவையை நிரப்பதான் நண்பனே தவிர உங்கள்
வெறுமையை அல்ல

இனிமையான நட்பு
இதயத்திற்கு மறுமலர்ச்சி ஊட்டும்
காலைநேரப் பனித்துளியையும் பகிர்ந்து

சிரிப்பும் ஆனந்தமுமாக செழிக்கும்

No comments: