திருவள்ளுவர்
திருவுருவப் படவிளக்கம்
மனிதன் நிறைவுள்ள மனிதத் தன்மையை
எப்தும்வழி?
மனிதன் தன் வாழ்வில் தோன்றும் குற்றங்
குறைகட்கு இடமளிக்காது நன்னெறியில் நின்று நிறைமனிதனாக உயரும் வழியை வகுத்துத்
தந்த பெருந்தகைதான் திருவள்ளுவர்.
மனிதன் மனம், வாக்கு,
காயம் இவைகளாற்றான்
நன்மையோ, தீமையோ
இபற்ற முடியும். இவைகளின் மூலம் செய்யும் நற்காரியங்களை உலகம் ஒப்ப வேண்டும்.
அப்போது அதுமனிதத் தன்மையெனப் போற்றப்படும். இம் மனிதத் தன்மையை ஒவ்வொருவரும்
பெறுவதற்குக்
தெய்வப் புலவர் திருவள்ளுவரால் ஒரு
நந்நெறி வகுக்கப்பட்டுள்ளது. இதற்குப் பெயர் திருக்குறள்.
உலகியல் முறை, உள்ளொளி
(ஆன்மீக) நெறி
ஆகிய பல துறைகளிலும் ஒரு திட்டத்தோடு
கடமையை ஆற்றி மனநிறைவு பெற்று வாழும் வகையை ஒழுங்குப்படுத்தித் தந்த நூல், உலகில், திருக்குறள் ஒன்றே என்றால் மிகையில்லை.
எனவே இப்பெரும் நூலை இயற்றும் திறன்
பெற்ற பெரியார் தம் வாழ்நாளின் எந்த வினாடியையும் வீணாக்கியிருக்க முடியாது.
'உலகியலுக்கு அடிமையாகிவிடாமலும்,
எளிய
இன்ப நுகர்விலே கட்டுண்டு விடாமலும்,
தனித்து நின்று தமது அறிவையும், முயற்சியையும்
ஆட்கொண்டாலன்றி மனித குலத்தை உய்விப்பதற்கென்று தாம் மேற்கொண்டுள்ள அரும் பணியை
நிறைவேற்றுவதற்குக்
தம்மால் ஈடு கொடுக்கவியலாது போகும்
என்பதைஉணர்ந்தவராகக் கருதப்பட்டதால் நிலைப்பெற்ற (தெய்வீக ஒளி படைத்த) அருள்
உருவினராகத் திருவள்ளுவரின் திருக்கோலம் அமைக்கப்பெற்றது.
கூடாவொழுக்கம் என்னும் அதிகாரத்தில்
''மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்
பழித்தது ஒழித்து விடின்"
என்று கூறியுள்ளதைக் காணின், தலை மழுங்க
மொட்டையடித்துக் கொள்வதால் தெய்விக
(அருள்) ஒளி பெறுதலோ, தாடியும் சடாமுடியும் வளர்த்தலால்
முனிவராக ஆதலோ ஒருக்காலும் இல்லை என்பதுடன், உலகத்து
நன்மக்களால் தவறானவை என்று கடியப்பெற்றவற்றை நீக்குதல் ஒன்றே தவமாகும்'' என்னும்
கருத்து விளக்கமாகும்.
இதை இவ்வளவு வற்புறுத்த
வேண்டியதேனெனில், தலையை மழித்து துறவறம் பூணுவதாலோ,
முடியை நீட்டித் தவம் செய்வதாலோ பெறப்படும் நன்மையை உலகத்துப்
பெருமக்களால் தீயவை என்று
கருதப்படுபவைகளை நாம் ஒழித்துக்
கட்டுவதாலேயே நாம்பெற்று விடுகிறோம். இதை உலகம் பெரிதும் மதிப்பது கண்கூடு. இப்படி
மதிக்கப்பட வேண்டுமானால் அது தவத்தினால்தாள் கிடைக்கும். எனவே தவம் என்பது
தீயவைகளை அழித்துக் கட்டுதல் என்க.
இத்தகு விளக்கங் கண்ட
திருவள்ளுவருக்குத் திருமுடி எவ்வாறு அமைந்திருக்கக் கூடும்! சிறிதே முன்வழித்துப்
பின்வளர்த்தப் பெருங் குடுமியா ? நாகரீகஒப்பனையுடன் வெட்டப் பெற்ற
சிகையா? இவையனைத்தும் தனித் தனிக் குழுவாரின் அடையாளமாக
ஆகிவிட்டமையின், திருவள்ளுவரின் கருத்துக்குப்
பொருந்துவன ஆகாவாதலின், திருவள்ளுவருக்குத் திருமுடியும்
நீவப்படாத தாடியும் இருத்தல் நன்று
என்று கருதப்பட்டது.
ஓவிய இலக்கண முறைப்படி உயர்ந்த மதி
படைத்தோருக்கு நெற்றி பரந்தும், உயர்ந்தும் இருக்க வேண்டுமென்பதோடு,
அவர்கள் நாசியின் நீளத்திற்கொப்பாகவோ, அல்லது
சற்று அதிகமாகவோ அது இருத்தல் வேண்டுமென்பதால், அதற்கொப்ப
திருவள்ளுவரின் நெற்றி அமைக்கப்பட்டது.
அதே முறைப்படி நாசி ஓணான் முதுகில்
எவ்வளவு நுண்ணிய வளைவு தென்படுகிறதோ அவ்வளவு வளைந்திருக்க வேண்டுமென்பதோடு,
நாசியின் நுனி மழுங்கியிராமல், அதன்பருமனுக்கேற்ற
கூர்மையுடனிருந்தால்
புத்திக் கூர்மையும், உண்மையை உய்த்துணரும்
ஆற்றலும் உண்டு என்பதோடு, நாசித் துவாரத்தின் இரு பக்கத்து மேல் மூடிகளும் சற்று மேல்நோக்கி
அகன்றிருக்க வேண்டும். அப்படி இருந்தால் நல்வவைகளைத் தேர்நதெடுக்கும் ஆற்றல்
உண்டாகிறதுஎன்பதால்
திருவள்ளுவரின் நாசி அதற்கொப்ப
அமைக்கப்பட்டது.
வாய் அகன்றிருக்கக் கூடாது. குறுகியும்
இருக்கக்
கூடாது, மெல்லியதாய்
இருத்தலும் கூடாது; அப்படி இருந்தால் வாய்மைத் திறன்
வாய்க்காது. ஆகையால் தமக்கென்று ஏற்படுத்திக் கொண்ட பெரும் பணியை
நிறைவேற்றுவதற்கான உறுதியைத் தெளிவாகக் காட்டுமாறு திருவள்ளுவரின் உதடுகள்
அமைக்கப்பட்டன.
உலகின் மீதுள்ள பெருங் கருணையால்தான்
திருவள்ளுவர் திருக்குறள் இயற்றித் தந்தார் என்று கருதப்பட்டதால், ஆழ்ந்த சிந்தனை, கருணை, ஒளி,
பொதுநோக்கு இவை நிரம்பிய கண்கள் படைக்கப்பட்டன.
சிந்தனையிலுள்ளபோது திருவள்ளுவரின்
வலது புருவம் சற்றே உயர்ந்து, உள்ளம் செயல்பட்டுக் கொண்டிருப்பதைக்
குறிக்கிறது.
அவரது நீண்டகன்ற காதுகள் பலப் பல ஆண்டு
காலமாக அவர் பெற்ற கல்வியினாலும்
உலகியல் பயிற்சியினாலும் அவர் எய்திய அறிவுத் திறனையும், தேர்ந்தசெவிச்
செல்வத்தையும் காட்டுவனவாக உள்ளன.
உண்பதை அளவறிந்து உண்டால் நோய் வராமல்
தடுக்கலாம் என்றும், மருந்தே தேவையில்லை என்றும்,
"குறைவாக உண்பவனிடத்து இன்பம் போல்
நிறைவாக உண்பவனிடத்துத்
துன்பமிருக்கும்'
என்பது போன்ற நல் வரிகனக் கூறிய
திருவள்ளுவர், தானும் அவற்றைக் கடைப்பிடித்திருக்க
வேண்டும். அதனால் அவருக்கு உடல் நலக்குறைவு நேர்ந்திருக்காது.
அக்காரணத்தால், உடல்
தன் ஊட்டத்தினின்றும்
இளைத்திருக்காது என்பதாலும், திருவள்ளுவர்
பகையை வென்ற பேராண்மை மிக்கவர்
என்பதாலும் அவரது திருமேனி நல்ல ரத்தத்துடனும். கட்டுக்கோப்புடனும்.
பண்பட்டிருத்தலை அமைத்துக் காட்ட தூண்டுதலாயிற்று.
உலகப் பற்று. சமயப் பற்று
இவைகனிலிருந்து
திருவள்ளுவர் விலகித்தான் இருந்திருக்க
வேண்டும் என்பதேனெனில், ஏதாவது மதத்தைடோ தழுவிய நன்மொழிகள்
திருக்குறளில் எங்கும் தென்படவில்ல.
அப்படியிருந்தால் மது தேச
வேறுபாடுகளின்றி
எல்லோரும் அதைத் தத்தம் மொழியில் மொழி
பெயர்த்து வருவதும் நிகழாது. மேலும்
அந்நாட்களில் வாழ்ந்திருக்கக்கூடிய மத,
சமய வெறியர்களிடமாவது கருத்து மாறுபாட்டினையும் கண்டனங்களையும்
எழுப்பத் தவறியிருக்காது என்பதில் ஐயமில்லை. மொத்தத்தில் மனிதன்
உலகில் ஒப்புற வாழ்ந்து உயரும் விதியை
மாத்திரம் திருக்குறள் உணர்த்துவதால் திருவள்ளுவருக்குச் சமயக் குறிகள், மதச் சின்னங்கள் முதலியவை இல்லா மல் ஆயின.
மார்பிலும், முன்கையிலும்
அமைந்துள்ள ரோமவரிசைகள், தாம் ஏற்ற பணியை நிறைவேற்றிக் கொள்ளும்
ஆண்மையைக் குறிப்பன.
தூய்மை நிறைந்த த உள்ளம்,
தூய்மை நிறைந்த நோக்கு,
தூய்மை நிறைந்த வாக்கு,
தூய்மை பெற்ற உடல்,
தூய்மையான குறிக்கோள்
இவையிருப்பதால், திருவள்ளுவர்
தூய்மையான வெண்ணிற ஆடை புனைந்திருத்தல் நன்று என்று கருதப்பட்டது.
வலக்கையில் எழுத்தாணியை பிடித்துள்ள
அழுத்தம் மனித குலத்தின் உயர்வுக்காகத் தன் அறிவாற்றலால் தளராது உழைத்துத் தம்
குறிக்கோளை நிறைவேற்றிக் கொள்ளும் வலிய ஊக்கத்தையும் நெஞ்சறுதியையும்
காட்டுவதாகும்.
கலை நலம் நிரம்பப்பெற்று காண்போரின்
அழகுணர்ச்சிக்கு விருந்தாகப் பொலியும்
இடது கை, உலகப் பொதுப் பணியை ஈடேற்றி வைக்கும்
பொறுப்புடன் ஓலையைத் தாங்கி நிற்பதாக அமைக்கப்பட்டது.
வலதுகால் பெருவிரல் மட்டும் சற்று முன்
வளைந்து இருப்பது ஏனெனில், கால் பெருவிரல் அற்ப ஆசைகளைக்
குறிப்பது. அந்த ஆசை வெளியில் தூக்கி எறியப்பட்டு விட்டது என்பதை வற்புறுத்த--
என்றால், நிராசையோடு
உலகத்தினிடம் பயனேதும் கருதாது பணி செய்து கிடப்பதே தன் கடனென்று நினைத்தார் என்க.
அல்லாமலும், எல்லோருக்குமே
சிந்தனை தீவிரமாக இருக்கும்பொழுது கால் பெருவிரல் அடுத்த விரலுடன் நெண்டிக
கொண்டேயிருக்கும். சிந்தனை சீர்பெற முடிந்ததும் ஒரு நிலையில் நின்று விடும்.
ஆகையால், அதற்கு ஒப்ப அமைக்கப்பட்டது.
ஏற்கனவே எழுதப்பட்ட திருக்குறளின் பல
அதிகாரங்கள் அவருக்கு வலப்புறம் குவிக்கப்பட்டிருக்கின்றன. அவற்றைத் தொடர்ந்து
அப்பாலும் பல
அதிகாரங்கள் குவிந்திருக்கின்றன என்று
ஊகித்துக் கொள்ளும் பொருட்டு,சில சுவடிகளின் சில பகுதிகள் மட்டுமே
தெரிவதாக வரையப் பட்டுள்ளது.
கையில் பிடித்துள்ள ஓலையில் ஒன்றும்
எழுதாதற்குக் காரணம் தமிழில் இலக்கிய வரம்பிற்குட்பட்டு நயம் பெற மிகச் சுருக்கமாக
எப்படி எழுத வேண்டுமென்ற சிந்தனை
திருவள்ளுவருக்கு இருந்திருக்க
முடியாது.
அப்படி சிந்தித்திருந்தால்
திருக்குறளில் அவ்வளவு நீரோட்டமும், தெளிவும் இருக்க
முடியாது. ஆகவே குறள்களை எழுத அவர்தம் விரல்களுக்கே தெரியும். ஓலையில் எழுத்தணியை
ஊன்றிட்டால், குறள்
முடிந்துதான் எழுத்தாணி இடம்
விட்டுப்பெயறும். இந்நிலையிஸ் மக்களுக்கு அடுத்து சொல்லப்பட வேண்டியது யாது
என்னும் சிந்தனையிலிருக்கும் நிலையாக உருவகம் செய்து, கண்களை
சிந்தனையில் ஆழ்த்திருக்கச் செய்திருப்பதால், இந்த
ஓலயில் ஒன்றும் எழுதாமல் விடப்பட்டது.
திருவள்ளுவர் தமக்கென வாழாதவர் என
ஊகிக்கப்பட்டதால், அவர் ஆசையற்று இருந்திருக்க முடியும்.
ஆசையற்ற இடத்தில் துக்கம் இருக்க
முடியாது. அவர் தூய கருத்துலகில், சிந்தனை வானில் வாழ்ந்தவராதலால், அவரது சூழ்நிலையும் தூய்மை என்பதைக்
குறிக்கவே பின்புறம் இருபக்கங்கள்—இவற்றில் மரம், செடி,
கொடிகளோடு- வீடு வாசலோ எவற்றையும்
அமைக்காமல், அவரது
உருவத்திலிருந்து வெளிப்பட்டுப் பரவி
நிற்கும் அறிவுச் சுடர் ஒன்று மட்டுமே இடம் பெறலாயிற்று.
அநேகமாக மனித சக்திக்கு அப்பாற்பட்ட
சக்தி உள்ளவர்களுக்கு சிரத்தைச் சுற்றிலும் 'ஒளி
வட்டம் ' ஒன்று சித்திரத்தில் அமைப்பது மரபாக இருந்து
வருகிறது. ஏனெனில் அவர்களிடத்தில் பேரறிவின் ஒளி வீசுகிறது என்பதைக் காண்பிக்க.
ஆனால், திருவள்ளுவருக்கு அந்த ஒளியை வட்டமாக
அமைக்காமல் தலையைச் சுற்றிலும் தூய நிறம் ஆரம்பித்து, அது
எங்குபோய் முடிகிறது என்பதைக் காட்டாமல், சுற்றிலுமுள்ள
மங்கலான இடங்களில் சென்று பாய்ந்து முடிவு தெரியாமல் விடப்பட்டிருப்பதற்குக்
காரணம். வள்ளுவரின் ஒளி மற்றையோர்போல வட்டமாகத் தனக்குமட்டும் நின்று விடாமல் வெளி
உலகிற்கு ஊடுருவிப்பாய்கிறதைக் காட்ட.
மண் தரையில் மரப்பலகையின் மீது
வள்ளுவர் அமர்ந்திருத்தல் ஏனெனில், எதையும் உயராது
இழுக்கும் பூமியின் ஆற்றலும் அவரது சிந்தனை உயர்வதைத் தடுப்பதற்கில்லை. அத்துடன்
உலகத்தோடு ஒட்ட ஒழுகியும். உலகியலுக்குத் தாம் அடிமையாகாமல் தனித்து நின்று
தனிப்பெரும் அற நெறியை வகுத்துத்
தந்த தனிப் பெருந்தகையான அவர் தம்
தூய்மையுற்ற உணர்வு செயல், ஆடை முதலியனவற்றை எந்த வகையிலும்
அழுக்குத் தீண்ட இடந் தருவது இழுக்காகுமமெனக் கருதியதாகும்.
நம் நாட்டின் ஒப்பற்ற அறிவுச்
செல்வமாகிய பெருந்தகை திருவள்ளுவரின் ஒளி வடிவம் இந்த ஓவியன் உள்ளத்தில்
உருக்கொண்ட வகையிலேயே நீர்க்கலவை வண்ணக் குழம்பு கலந்து தீட்டிய இந்த வடிவிலும்
நிலை
பெற்று அமைவதாகும்.
வாழ்க வள்ளுவரின் அறிவுப் பேரொளி!
கே.ஆர்.வேணுகோபால் சர்மா