Wednesday, January 6, 2016

வள்ளுவர் வாரிசு.


வள்ளுவத்தில் மெய்யியல் கூறுகள் ஏராளமாக இருக்கின்றன
திராவிட/ தமிழ் மரபில் வேதாந்த கோட்பாடுகளுக்கு 
எதிரான நிலைப்பாடு கொண்டதாக வள்ளுவத்தை உணரலாம்
வள்ளுவம் உலகியல் கோட்பாட்டை உயர்த்திப் பிடிக்கிறது
அவ்வாறே வள்ளுவம் சித்தர்கள் முதல் வள்ளலார் வழியாக பெரியார் வரை நீள்வதாக கருதலாம்.


ஒரு மனிதனுக்கு தான் செய்த அயோக்கியத் தனங்களுக்குப் பரிகாரம் காணவும்
தனது ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ளவும் தான் கடவுள் பக்தியும்
வணக்கமும் ஏற்படுகிறதே அல்லாமல், வேறு காரணம் எதுவும் இல்லை
பகுத்தறிவு என்பது மனிதன் ஒழுக்கமுடையவனாக இருக்க வேண்டும் என்பதையும்
மற்ற மனிதர்களுக்கு தன்னால் ஆன தொண்டு, உதவி செய்ய வேண்டும் என்பதையும் 
பெரிதும் தத்துவமாகக் கொண்டது ஆகும். பக்தி என்பது தனிச் சொத்து
ஒழுக்கம் என்பது பொதுச் சொத்து
பக்தி இல்லாவிட்டால் நஷ்டம் ஒன்றுமில்லை
ஒழுக்கம் இல்லாவிட்டால் எல்லாமே பாழ்.  என்றார்  தந்தை பெரியார் 

தந்தை பெரியார் அவர்கள் இவ்விதம் சொல்வதற்கு முன்னோடியாக
திருவள்ளுவரும் தமிழ்ச்சான்றோர் பலரும் இருந்து இருக்கின்றனர் என்பது உண்மை

வள்ளுவரின் வாரிசாக நாம் பெரியாரைக் காணலாம்.

No comments: