Wednesday, January 6, 2016

இந்திய ஆன்மீகம் சாதித்தது என்ன?



இன்று நாம் ஆன்மிகம் என்று பேசும்; இன்றைக்கு நம்மில் பலரும் சிலாகித்து போற்றும்; நம்புரிதலுக்கு உள்ளான இந்திய இந்து ஆன்மிகம் ஒப்பற்றது உயர்வானது என்பதெல்லாம் உண்மையா? இந்திய வைதீகர்களுக்கு இணை யாரும் கிடையாது என்பது சரியா? அப்படி என்றால் பல நூறு ஆண்டுகளுக்கும் மேலான இந்த ஆன்மிகம் சாதித்தது என்ன? மேலை நாடுகளில் இல்லாத அளவுக்கு ஒழுக்கச் சீர்கேடுகளும் அநீதியும் அக்கிரமங்களும் இந்திய மண்ணில் பெருகி இருக்க காரணம் என்ன?

இங்கு குறிப்பிடப் படுவது வேதாந்த தத்துவத்தை பற்றியது.... இந்திய ஆன்மீகத்தில் மிகமிக உயர்ந்த ஞானம் என்று பெருமைபடுத்திப் பேசப்படும் மாயாவாதம் / வேதாந்தம் என்ன சொல்கிறது? மக்கள் வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டிய  அறத்தை அறிவுறுத்துகிறதா? சமூக வாழ்வில் நீதி, நேர்மை, நியாயம் குறித்த அக்கறை கொண்டிருக்கிறதா?

லவகீகம், பரமார்த்திகம் என பிரித்து பிரம்மஞானம் பெற பரமார்த்திகம் மட்டுமே வழி லவகீகம் என்னும் உலகியல் நடைமுறை ஏற்றதல்ல என்று நிரூபிக்கவே குறியாக இருக்கும் வேதாந்த தத்துவம் எப்படி மக்களின் விருப்பத்திற்கு ஏற்ற உலகியல் வசதிகளுக்கான அறம், நீதி , நேர்மை, சமரசம் இவைகளை பேசும்?


ஆகவே ஊழல், லஞ்சம், ஒழுக்ககேடுகளுக்கு இந்திய இந்து ஆன்மீகமே மூலக்காரணமாக இருப்பதை புரிந்து கொள்ளமுடிகிறது. வேண்டுதல், பிரார்த்தனை, நேர்த்திக்கடன், உண்டியல், தட்சணை, பாவம், புண்ணியம், தோஷம், பரிகாரம், புண்ணிய ஷேத்திரம், தீர்த்தம், ஷேத்திரதரிசனம், தீர்த்தமாடல் இவைகளே இதற்கு ஆதாரம்இந்திய இந்து ஆன்மிகம் ஒரு சுலபமான ஆன்மிகம். எந்த ஒரு தவறான தப்பான குற்றங்களாகக் கருதக்கூடிய செயல்களுக்கான எதிர்வினைகளில் இருந்து தப்பித்துக் கொள்ளும் மிகவும் எளிதான தீர்வுகளை போதிக்கின்றது. இத்தகைய நிலைபாட்டை பெரும்பாலும் எல்லா மதங்களும் கொண்டு இருப்பதையும் மறுப்பதற்கு இல்லைமனித இடர்களுக்கான காரணம் கர்மபலன் என்றும் அது தவிர்க்க முடியாதது ஆகவே பொறுத்துக்கொண்டு இருப்பதே சிறந்தது என்பதாகவே மதங்கள் போதிக்கிறன. ஆதிக்க சக்திகளின் அடிமைகளாக மக்களை அழுத்தி வைப்பதிலேயே சிரத்தையாக இருப்பதும் புலப்படுகிறது. மெய்ஞான உலகிற்கு பிரம்மத்தையும் மெய்யான இவ்வுலகத்திற்கு வருண- சாதி அமைப்பையும் தந்ததல்லாமல் இந்திய ஆன்மிகம் சாதித்தது வேறு இல்லை என்றே நம்ப வைக்கிறது.

No comments: