Wednesday, January 6, 2016

தமிழர் பெருமையும் சிறப்பும்


பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்; சிறப்பொவ்வா  செய்தொழில் வேற்றுமை யான் (குறள் 972)
என்னும் வள்ளுவரின் பொதுமறையின்படி பிறப்பினால் எல்லா மனிதரும் ஒருவரே. ஆயினும் செய்யும் தொழிலின் அடிப்படையில் வேற்றுமைகள் உருவாகி பல்வேறு சாதிகளாகவும் குலங்களாகவும் பிரிந்துபட்ட சமூக வாழ்வில் அத்தகைய குழுக்களுக்கு எவ்வித சிறப்பும் ஒப்புடையது அல்ல என்பது தெளிவாகிறதுபிறப்பு சார்ந்த மனித சமுதாயம் பொது இனமாகவும் மொழி சார்ந்த சமுதாயம் சிறப்பு இனமாகவும் அதில் தொழில் சார்ந்த சமுதாயம் குலங்களாகவும் சாதிகளாகவும் மாறியது என நாம் கருதலாம். இதில் நாம் தமிழினத்தைச் சார்ந்தவர் என்றாலும் திராவிட இனத்தைச் சார்ந்தவர் என சொல்லிக் கொள்வதிலேதான் பெருமையும் சிறப்பும் அடங்கும்.


தமிழர், திராவிடர், ஆரியர் ஓர் விளக்கம்

திராவிடம் என்பதும் தமிழம் என்பதும் வேறு வேறு அல்ல. தமிழ்தான் அயலவரால் ஆரியரால் தமிளம் திரமிளம் திராவிடம் என்று அழைக்கப் பட்டது.

வரலாற்று ஆசிரியர்கள் இன்றைய இந்தியத் துணைகண்டம் முழுதுமே ஒரு காலத்தில் திராவிடர்களே வசித்து வந்ததற்கான ஆதரங்கள் உள்ளதை தெரிவிக்கின்றனர். வடஇந்திய மலை வாழ் மக்களிடையேயும் வடமேற்கே ஆப்கானிஸ்தான் பலுஜிஸ்த்தான் பகுதிகளில் இருக்கும் சில இனக்குழுவினர் பேசும் மொழிகள் திராவிட மொழிக்குடும்பத்தைச் சேர்ந்தவை என்று கூறுகிறார்கள்.

கடல்கோளால் மூழ்கிய குமரிக் கண்டத்தில் தான் முதல் மனிதன் தோன்றினான் என்றும் குமரிக்கண்டம் என்னும் லெமூரியா கண்டம் இன்றைய ஆப்ரிக்கா ஆசுதுரேலியா இந்தியா எல்லாம் இணைந்த நிலபரப்பு என்றும் ஆராய்சியாளர் நம்புகின்றனர். கடல் கோளால் பிரிந்த பிறகு மனிதஇனம் பலபகுதியிலும் பல்கிப் பெருகியதுஅங்கங்கு இருந்த இயற்கை தட்ப வெப்ப நிலைக்கு ஏற்ப மனிதன் உருவமும் தோற்றமும் மாறி நிலைபெற்றது. அந்த காலக் கட்டத்தில் இந்தியப் பகுதியில் மிஞ்சி இருந்த ஆதி குடிகள் நாகரிகம் அடைந்து பல துறைகளிலும் முன்னேறியவராகத் திகழ்ந்தனர். நடுநிலக்கடல் பகுதியில் இருந்தவர் இந்தியப் பகுதிக்கு பிழைப்புக்காக பல்வேறு கால கட்டங்களில் வந்தனர். அவர்கள் ஆரியர் எனப் பட்டனர். இப்போது அவர்கள் இந்தியா முழுதும் பிராமணர் என்ற பொதுப் பெயரால் அழைக்கப்படும் பல்வேறு கோத்திர குழுவினரைக் குறிப்பதாக வரலாற்று அறிஞர்கள் கருதுகின்றனர்இந்தியப் பகுதியில் வாழ்ந்த மக்களைக் காட்டிலும் நாகரிக வளர்ச்சியில் அப்போது அவர்கள் குறைந்தவர்களாவர். அவர்கள் உடல் நிறம் இங்கிருந்தவர்களைக் காட்டிலும் சிகப்பானதாக இருந்தது.

சிந்துவெளியில் அரப்பா-மொகன்சோதரா நாகரிகம் ஆரியர் வருகைக்கு முந்தியதாகவும் அவர்கள் வந்த சமயத்தில் இருந்ததாகவும் அது திராவிடர் நாகரிகம் என்றும் ஆராய்ச்சியாளர் கருதுகின்றனர்.

ஆரியர் வந்த பிறகு இங்கிருந்த திராவிட மக்களுடன் வன்மையாகவும் மென்மையாகவும் கலந்துவிட்ட சூழலில் அவர்களின் மொழியுடன் இங்குள்ளவர் மொழிகளும் கலந்து பல்வேறு மொழிகளும் அதன் அடிப்படையிலான மொழிக்கூட்டமும் உருவானதை அறிஞர்கள் தெரிவிக்கின்றனர். மக்களின் உடல் வாகும் நிறமும் கூட மாறுதலடையத் தொடங்கின. இன்றைக்கும் வட இந்திய மாநிலங்களில் பெரும்பாலான மக்கள், கிராமங்களில் வசிப்பவர், தொழிலாளிகள் உடல் நிறம் தென்நாட்டவரைப் போன்றே மாநிறத்தினராக இருப்பதைக் காணலாம்.

இவ்வகையான இனக்கலப்பு அயலவர் படையெடுப்பின் போதும் குடிபெயர்தலின் போதும் நேர்வது இயல்பானது. பல்லாயிரம் காதத்தொலைவிலிருந்து வருபவர்களுடன் பெண்டிர் கூட்டம் குறைவாகவே இருந்திருக்கும். இங்குள்ள பெண்களை மணந்தும் உறவுகொண்டும் பல்வேறு கலப்பினங்கள் உருவாகுவதும் சாத்தியமே.

இந்தகாலகட்டத்தில் தான் ஆரியர் அவர்தம் மொழியை செப்பனிட்டு சீர்செய்து வடிவமைக்கப்பட்டது என்னும் பொருளில் சமசுகிருதம் என்னும் மொழியை உருவாக்கிக் கொள்கிறார்கள். அம்மொழிக்கலப்பால் பல்வேறு கலப்பு மொழிகள் உருவாகின. தமிழின் மீதான சமசுகிருத தாக்கம் வெவ்வேறு விகிதக் கலப்பில் தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு என்ற முதன்மை திராவிட மொழிகள் உருவாயின. குமாரிலப்பட்டர் என்னும் ஆரியகுரு பஞ்ச திராவிடம் என்று தமிழ், தெலுங்கு, கன்னடம்,, மராட்டி, குசராத்தி அய்ந்தையும் குறிப்பிட்டு இருப்பது சிந்தனைக்கும் ஆய்வுக்கும் உரியது. அப்போது மலையாளம் என்னும் மொழி உருவாகவே இல்லை என்பதும் தெரிகிறது.

ஆரியர் ஆதிக்கம்

ஆரியர் பெரும் அளவு ஆனப் பிறகு தங்களின் ஆதிக்கத்தை வளர்க்கவும் நிலை நிறுத்தவும் செய்த பல செயல்களின் வடிவமே வர்ணச்சிரம முறையாகும். பிறப்பின் அடிப்படையில் சமுதாயத்தை நால் வகையாகப் பிரித்து, தொழிலின் அடிப்படையில் பிரிந்து ஒரே சமுதாயமாக இருந்த பெரும்பான்மையான நம்மவரை அதில் நான்காம் பிரிவான சூத்திரர் எனும் பிரிவில் அடைத்தனர்.

அந்த அடிப்படையில் தமிழரிலும் பல சாதிப் பிரிவினைகள் தோன்றி  நிலைப் பெறத் துவங்கின. உலகத்தில் பிறப்பின் அடிப்படையிலான உயர்வு தாழ்வு உடைய சமூகம் எங்குமே கிடையாது. ஆரியர்  இந்தியா என்று இன்று வழங்கும் நிலபாகம் வந்தப் பிறகு தம் அதிகாரத்தை நிலைநாட்ட ஏற்பட்டதே இம்முறை. அது இன்றும் தொடர்வதை நாம் கண்கூடாகக் காண்கிறோம்.


மொத்த மக்கள் தொகையில் மூன்று விழுக்காடு மட்டுமே உள்ள குலத்தவர் சமுதாயத்தில் உயர் மட்டத்தில் இருப்பதும் அவர்களுக்கு அதீத மதிப்பும் மரியாதையும் மற்றவர்கள் அளிக்க நேருவதும் எப்படி சாத்தியம் ஆனது என்பதை சிந்திக்க வேண்டும்இப்பகுதில் வாழ்ந்த ஆதிகுடிகளான திராவிடரில் வேற்றுமை உருவாகி அவர்தம் கலாச்சாரம் பண்பாடு வாழ்க்கை முறை யாவும் மாறுபட்டு வேறுபட்டு சின்னாபின்னமாகிவிட்டது. ஆரியரின் சூழ்ச்சியில் அக்கால மன்னர்கள்  சிக்கி நம் இன பண்பாட்டு பழக்க வழக்கங்கள் ஆரியமயமானதற்கு காரணமாயினர்

 தமிழர் வாழ்வு சிறப்பது எப்படி?

யாதும் ஊரே யாவரும் கேளிர்என சூதுவாது இன்றி சொன்னத் தமிழனை ஆயிரம் ஆண்டுகாலமாய் ஆண்டவர்கள் யார்? சொந்த நாட்டு காவலன்சுரண்ட வந்தக் கயவர் யார் என்பதை அடையாளம் காணத்தவறியதின் விளைவு, காவல் காக்கும் வீட்டு நாய்களை விடுத்து காவு கேட்கும் வேட்டை நாய்களை ஊட்டி வளர்த்தோம். அதனால் நம் மொழி இழந்தோம். மண் இழந்தோம். மானம் இழந்தோம். இன்றைக்கு தமிழன் இல்லாத நாடு இல்லை. ஆனால் தமிழனுக்கு என்று ஒரு நாடு இல்லாத நிலை.
அன்னிய சக்திகள் ஆதிக்கச் சக்திகள் ஆளுமைக்கு உட்பட்டோம். இதற்கெல்லாம் காரணம் நாம் குலங்களாக / சாதிகளாக பிரிவுபட்டு ஒற்றுமை குலைந்து ஒருவருக்கு ஒருவர் நான் மேல் நீ கீழ் என்று போட்டியிட்டு கொண்டதே.

இந்நிலை மாற வேண்டுமானால் தமிழன் தலை நிமிர்ந்து வாழ வேண்டுமானால் திராவிடன் எனும் இன உணர்வும் தமிழன் என்கிற மொழி உணர்வும் நம்மில் ஒவ்வொருவரிடமும் உருவாக வேண்டும். அதுவே  ஊற்றெடுத்துப் பெருக வேண்டும்.

அதற்கான சில எளிய வழிமுறைகள்
1.             சுயமரியாதை/ பகுத்தறிவு/ சீர்திருத்தம்/ தமிழ்த் திருமணம் நடத்துவது.
2.             குழந்தைகளுக்குத் தமிழில் பெயர் சூட்டுவது
3.             கடவுள் நம்பிக்கை உடையோர் கோயிலில் தமிழில் அர்ச்சனை செய்வதும் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆக ஆதரவு தருவதும் வேண்டும்.
4.             புதிய கோயில்கள் எதுவும் கட்டுவதற்கு ஆதரவு தரவேண்டாம். அப்படி கட்டினாலும் அங்கே தமிழர்களை பூசாரிகளாக்கவும் தமிழில் அர்ச்சனை செய்யவும் தமிழில் குடமுழுக்கு செய்யவும் வலிவுறுத்துங்கள்.
5.             மூடநம்பிக்கைகளை ஒழிக்க வேண்டும்சகுனம்- சோதிடம்- நாடி, பார்ப்பதை தவிர்க்க வேண்டும்.
6.             எதையும் ஏன் எதற்கு என்று கேள்விகள் கேட்டு விடை தேடும் பக்குவம் வேண்டும்.
7.             சாதிமதம் இரண்டையும் பொருட்படுத்தக் கூடாது
8.             சாதி அடிப்படையிலான அரசின் சலுகைகளை பெற தகுதி உடையவர் மட்டும் கல்விக் கூடங்களில் சாதியைக் குறிப்பிட்டால் போதுமானது. மற்றவர்கள் சாதி- மதம் எதுவும் சாராதவர்கள் என்று குறிப்பிட சட்டம் அனுமதிக்கிறது.
9.             எந்த விழாக்களிலும் பார்ப்பன சம்பிரதாய சடங்குகளைப் பின்பற்றக் கூடாது.
10.           தமிழரின் நீதி நூல்வேதம் - திருக்குறள். வள்ளுவர் நெறி வாழ்வியல் நெறியாக முடிந்தவரை பின்பற்ற வேண்டும்.

No comments: