தீர்கதரிசி - திருமணம் பற்றி
பிறகு அல்மித்ரா மீண்டும் பேசும் போது கேட்டார்:
”ஆசானே திருமணம் என்பது என்ன?”
அதற்கு அவர் பதில் அளித்தார்
”நீங்கள் ஒன்றாக பிறந்தீர் .
எப்போதும் ஒன்றாகவே இருப்பீர்.”
”மரணம் உங்கள் நாட்களில் வெண் சிறகடிகும் வரை
ஒன்றாகவே இருப்பீர்.
இயற்கையின் அமைதியான நினைவுகளிலும்கூட
ஒன்றாகவே இருப்பீர்.”
”ஆனால் உங்களிடையே இடைவெளி இருக்கட்டும்..
சொர்கத்தின் காற்று அங்கே நடனமாடட்டும்..!
ஒருவர் மீது ஒருவர் அன்புகாட்டுங்கள் -
ஆனால்
அன்பால் கட்டிப் போடாதீர்கள்..
இருவரின் இதயக் கரைகளுக்கு இடையே
கடல் கொஞ்சம் அசைந்தாடட்டும்”
”ஒருவருக்கு ஒருவர் குவளையை நிரப்புங்கள் – ஆனால்
ஒரே குவளையில் குடிக்காதீர்
உங்கள் உணவை அடுத்தவருக்குப் பரிமாறுங்கள் - ஆனால்
ஒரே உணவை ஒரே தட்டில் உண்ண வேண்டாம்.
சேர்ந்து பாடுங்கள் சேர்ந்து ஆடுங்கள் - ஆனாலும் தனியாக.
பாடுங்கள் பரவசமாக ஆடுங்கள் ஆனந்தமாக.”
யாழின் நரம்புகள் தனித்தனியானதே -
ஆனாலும்
அவைகள் நடுங்கும் போது ஒரே இசையை எழுப்புகின்றன..
வாழ்க்கைக் கரங்களில் தன் இதயத்தை ஏந்தி நிற்பவர்களுக்கு
உங்கள் இதயத்தை கொடுங்கள் - ஆனால்
கொடுக்காமலே வாங்க எண்ணாதீர்..
சேர்ந்து நின்றாலும் நெருக்கமாக நிற்க வேண்டாம்.
கோயிலின் தூண்கள் இடைவெளி விட்டே இருக்கும்.
ஆலும் வேலும் ஒன்றதன் நிழலில் ஒன்று வளராது
No comments:
Post a Comment