பாரதிதாசன் என்னும் பாவலன் - பாடலினால்
பகுத்தறிவு பரப்பிய தமிழ்க் காவலன்
பாரதிர குரலெழுப்பி பாடியவன் - தமிழர்
பைந்தமிழ்ப் பகைவரைப் பற்றிச் சாடியவன்
தமிழ்நாட்டை ஆண்டவர் மூவேந்தர் - தமிழர்தம்
தன்மானம் காக்கமனம் கொண்டவர் பாவேந்தர்
அமிழ்தென்றார் தமிழை கவிஞர் - அதையுண்டால்
அழியோம் என்றறைந்த அழகுதமிழ் அறிஞர்
தலைவணங்கா குணங்கொண்ட தீரர் – ஆயினும்
தமிழென்றால் தாள்தொடும் தன்மைபூண் டவீரர்
சிலைவணக்கம் இழிவென்ற நாத்திகர் –
செந்தமிழே
சிறந்த தெய்வமென தொழுதிட்ட
ஆத்திகர்
குடும்ப விளக்கென்னும் காவியம் –
இன்பம்
குழைத்த வண்ணச் சொல்கருத் தோவியம்
இடும்பை அகற்றும் மருந்தாக –
தந்தார்
இனிதே உண்ணுதற்கு இல்லறத்தார் விருந்தாக
வேண்டிய மக்களாட்சி வெற்றிபெற - சமத்துவ
வேட்கையால் சாதிமத சமுதாயம்
முற்றுபெற
பாண்டியன் பரிசு
படைத்தார் – புரட்சிக்கவி
புதியதோரு
லகம்செய்ய பழமையை உடைத்தார்
திராவிடர் திருப்பாடல் தொகுத்தார் –
புரட்சித்
திருமணம் நடத்திட நன்முறை வகுத்தார்
திராவிடர் வாழவே வளமுடன் –
தமிழியக்கம்
தீட்டினார் இன்பம் சூழவே நலமுடன்
இயற்றியவர்: அருள்பேரொளி
(சண். அருள் பிரகாசம்)