நல்லது கெட்டது பற்றி
முதியவர் ஒருவர்
நல்லது கெட்டது
பற்றி சொல்லுங்கள் என்றதும்
அதற்கு அவர்
பதில் அளித்தார்
உங்களின் நல்லதை
என்னால் கூறமுடியும் தீயதை அல்ல
தீயது என்பது
என்ன?
தன் பசிக்கும்
தாகத்திற்க்கும்
நல்லது
தன்னைத்தானே கொடுமைப்படுத்திக் கொள்வதுதான்
நல்லதுக்குப்
பசிக்கும் போது
இருண்ட
குகையிலும் உணவைத் தேடுகிறது
தாகம் எடுத்தால்
செத்தநீரையும் அருந்துகிறது
என்பதுதான்
உண்மை.
உங்களோடு நீங்கள்
ஒருவனாக இருக்கும் போது
நீங்கள் நல்லவர்
உங்களோடு நீங்கள்
ஒருவனாக இல்லாத போதும்
நீங்கள் தீயவர்
அல்ல
பாகப்பிரிவினை
செய்யப்பட்ட வீடு திருடர் குகையல்ல
பாகம்
செய்யப்பட்ட வீடு அவ்வளவுதான்
சுக்கான் இல்லாத
கப்பல் திகில்தீவுகளுக்கிடையே
இலக்கின்றி
திரிந்தாலும் கடலாழத்தில் மூழ்கிவிடாது
உங்களையே
கொடுக்கப் போராடும்போது நீங்கள் நல்லவர்
ஆதாயம் தேடினாலும்
நீங்கள் தீயவர் அல்லர்
ஆதயத்திற்கு
போராடும்போது
நீங்கள் பூமியைப்
பற்றிக்கொண்டு
அதன் மார்பை
உறிஞ்சும் வேர்கள்
”பழுத்தபின் ஏராளமாக மொத்தமாக
எப்போதும்
கொடுக்கும் என்னைப்போலிரு” என்று
கனிகள் வேரிடம்
உறுதியாக சொல்லமுடியாது.
கனிகளுக்கு
கொடுப்பதும் வேர்களுக்கு உறிஞ்சுவதும்தான் வேலை
விழிப்புடன்
பேசுகையில் நீங்கள் நல்லவர்
தூக்கத்தில்
பயனற்று நாக்கு உளறினாலும் தீயவர் அல்லர்
திக்குப்
பேச்சுங்கூட வலுவற்ற நாவினை வலுவாக்கும்
இலக்கை நோக்கி
துணிவோடு உறுதியுடன்
நடைபோடும்போது
நீங்கள் நல்லவர்
கெந்திக் கொண்டு
நடந்தாலும் நீங்கள் தீயவர் அல்லர்
நொண்டிநடை
போடுபவர்களும் பின்னோடி நடப்பதில்லை – ஆனால்
துணிவும்
துள்ளலும் உடையவர்கள் பரிவு கருதி
முடவன் எதிரில்
நொண்ட பார்க்காதீர்
எல்லோரும்
நல்லவரே எண்ணற்ற வழிகளில்
நல்லவராக இல்லாத
போதும் யாரும் கெட்டவர் அல்ல
மந்தமாக திரிந்தவர்
அவ்வளவே
ஆமைகளுக்கு
புள்ளிமான்கள் துள்ளலைப் பற்றி
பாடம் எடுப்பது
பரிதாபம்
உங்களின் நல்லத்தனம்
உங்கள்
விருப்பங்களின் பெருந்தன்மையில் இருக்கிறது
விருப்பம் உங்கள்
எல்லோருக்கும் இருக்கிறது – ஆனால்
உங்களில் சிலரின்
விருப்பங்கள்
மலைப்பகுதியின் மர்மங்களையும்
காடுகளின்
பாடல்களையும்
கடலில்
சேர்க்கும் வெள்ளப் பெருக்காக இருக்கிறது
வேறு சிலருக்கு
விருப்பங்கள்
முகத்துவாரம்
அடையும் முன்பும்
வளைவுநெளிவுகளில்
தன்னை இழந்து
திரிந்தோடும்
சீரான ஓடையாக இருக்கிறது
ஆனால் விருப்பம்
மிக்கவர்கள்
விருப்பு குறைந்தவர்களிடம்
கேட்க வேண்டாம்
“நிதானமே தேங்கலே எங்கிருந்து வந்தீர்”? என்று
உண்மையான நல்லவர்
அம்மணத்தை
”உன் ஆடை எங்கே”? என்றோ
வீடற்றவரை
“உன் வீடு என்னவாயிற்று’? என்றோ
கேட்க மாட்டார்
No comments:
Post a Comment