பேசுவது பற்றி
ஒரு படிப்பாளி
பேசுவதைப் பற்றி கேட்டார்
அவர் சொன்னார்:
எண்ணங்களுடன்
அமைதியாக இருக்க முடியாத போது பேசுகிறீர்
இதயத்துடன் ஒன்றி
வாழ முடியாத போது
உதடுகளுடன்
வாழ்கிறீர்
குரலெழுப்பல்
என்பது
அமைதியின்
மாற்றுவழியும் பொழுதுபோக்கும் ஆகும்
பேசும்போது
சிந்தனைகள் பாதி சாகடிக்கப்படும்
எண்ணங்கள் எனும்
விண்வெளிப் பறவை
சொற்கூண்டில்
அடைபட்டு சிறகு விரிக்கிறது
ஆனாலும் பறக்க
முடிவதில்லை
உங்களில் சிலர்
தனிமையின்
அச்சத்தில் நாவன்மையை நாடுகின்றனர்
தனிமையின் அமைதி
அம்மண உண்மையை
கண்ணுக்குக் காட்டும்போது
பேசியே
தப்பித்துக் கொள்கிறார்கள்
அறிவில்லாமலும்
முன்யோசனையின்றியும் பேசுபவர்கள்
தமக்கே புரியாமல்
பேசுகிறோம் என்ற
உண்மையை
வெளிப்படுத்துகிறார்கள்.
உண்மை உள்ளவர்கள்
வார்த்தைகளில் சொல்வதில்லை
தாள அமைதியில்
குடிகொண்டிருக்கும் உயிர்போல்
அவர்கள் பேச்சு நெருக்கமாக
நிலைகொண்டிருக்கிறது
நண்பரை
சாலையோரத்திலோ சந்தையிலோ சந்திக்கும்போது
உயிர்மை உதடுகளை
அசைத்து நாவை வழிநடத்தட்டும்
ஒலியின் குரல்
பேச்சினுடைய செவியில் ஒலிக்கட்டும் - அப்போது
பேச்சின்
உயிரோட்டம் இதயத்தின் உண்மையை
மதுவின் சுவை
போல் மறக்கவொண்னாமல் நினைக்க வைக்கும்
(கருத்து)வண்ணம் மறந்தபோது (பேச்சுக்)கலம்
மறைந்துபோகும்
No comments:
Post a Comment