Wednesday, June 8, 2016

தீர்க்கதரிசி - கற்பித்தல் பற்றி

கற்பித்தல் பற்றி.
பிறகு ஒரு ஆசிரியர் கற்பித்தல் பற்றி சொல்லுங்கள் என்றதும்
அவர் சொன்னார்:

அறிவின் ஆரம்பத்தின்
அரைத் தூக்கத்தில்
ஏற்கனவே இருப்பதை
யாரும் வெளிப்படுத்த முடியாது

கோயில் நிழலில் ஆசிரியர் மாணவர்களோடு நடக்கையில்
அளிப்பது ஞானத்தை அல்ல
அவருடைய நம்பிக்கையும் அன்பையும்தான்

உண்மையில்
ஆசான் ஞானி என்றால்
அவரது ஞானவீட்டில் நுழைய
மாணாக்கரை ஏவமாட்டார்.  ஆனால்
மனவெளியோரம்  அவர்களை வழி நடத்துவார்

வானியலறிஞர் அண்டத்தைப் பற்றிய
அவரது புரிதலை உங்களிடம் சொல்லலாம்  - ஆனால்
அவரது புரிதலை அப்படியே உங்களிடம் தரமுடியாது

விண்வெளியின் தாளகதியில் இசைவாணர் பாடலாம்-ஆனால்  
தாளத்துக்கு விலங்கிட்டு குரலை எதிரொலிக்காத காதுகளில்
அவரது பாடலை ஊற்ற முடியாது

எடையின் பரிமாணத்தை அளவின் பரப்பை
அறிவியல் எண் அறிஞர்
எண்ணிக்கையில் சொல்ல முடியும்- ஆனால்
அந்த பரந்த பரிமாணவெளியில்
அழைத்துச்செல்ல முடியாது

ஒருவர் பார்வை பெற இன்னொருவர் தர வேண்டியது
சிறகுகள் அல்ல.

ஒவ்வொருவரும் இறைஞானம் வேண்டி தனித்து நிற்பதால்

இறையறிவிலும் உலகப்புரிதலிலும் தனித்தே இருக்கிறீர் 

No comments: