Thursday, April 27, 2017

காலக்கணக்கு - பாகம் 2

சம்ஸ்கிருத புத்தாண்டு என்று சித்திரை முதல் நாளை நம்மவர்கள் சிலர் சொல்வது தவறு என்று குறிப்பிட்டதன் காரணம் என்னவென்றால் மொழியின் அடிப்படையில் புத்தாண்டுகள் துவக்கபடுவதில்லை. குறிப்பிட மொழி பேசும் இனத்தவர்கள் அவரவர் பகுதியில் கொண்டாடும் ஆண்டுத் துவக்கத்தை புத்தாண்டு என்கின்றனர்.

இந்திய துணைக் கண்டத்தில் வசிக்கும் மொழியின மக்களின் புத்தாண்டு விவரம் :

தெலுங்கர்         தெலுகு யுகாதி அல்லது தெலுகு கொத்த சமச்வரம் ,
கன்னடர்           கன்னடயுகாதி,
மணிபுரி           சஜ்பு நோங்மா பண்பா
காஷ்மிரி          நவரே
சிந்தி              சேத்தி சாந்த்
மராட்டியர்         குடி படவா,  
கொங்கண்         குடி படவா
வங்காளி          பஹலே பைசாகி அல்லது பங்காப்தா
ஓடியா            பன சங்கராந்தி ,
பஞ்சாப்           வைசாகி ,
குஜராத்தி          பெஸ்து வரஷ்
இராஜதானியர்     மார்வாரி நயாசால்  
மலையாளம்       விஷு
பீகார்              ஜுடே ஷீத்தல் அல்லது மைதிலி நயாசால்    
அசாம்            ரோங்காலி பிஹு அல்லது ரோஹாக் பிஹு  
திரிபுரா            திரிபுரப்தா


இவர்களில் தெலுங்கர் கன்னடர் மணிபுரி காஷ்மிரி சிந்தி மராட்டி கொங்கண் மொழியின மக்கள் சந்திர சுழற்சி முறையின் படி மார்ச் அல்லது ஏப்ரல் மாதம் வெவ்வேறு தேதிகளில் வித்தியாசப்பட்ட நாட்கணக்கில் வரும் புத்தாண்டு கொண்டாடுவர். சித்திரை அவர்களுக்கு முதல் மாதம்.

குஜராத்தியரும் ராஜஸ்தானியரும் அதே சந்திர சுழற்சி முறை பிரகாரம் அக்டோபர் அல்லது நவம்பர் மாதங்களில்  வெவ்வேறு தேதிகளில் வித்தியாசப்பட்ட நாட்கணக்கில் வரும் புத்தாண்டை கொண்டாடுவர். கார்த்திகை அவர்களுக்கு முதல் மாதம்.  

மற்ற அனைவருக்கும் சூரிய சுழற்சி முறைப்படி ஏப்ரல் மாதம் 13/14/15 தேதிகளில் குறிப்பிட்ட நாளில் ஒரே நாட்கணக்கில் வரும் புத்தாண்டை கொண்டாடுவர். அது சித்திரை முதல் மாதம் ஆகும்.

நிலைமை இப்படி இருக்க சஸ்கிருத புத்தாண்டு என்ற ஒன்று  எங்கிருந்து வந்தது. அப்படி ஒரு புத்தாண்டு எப்போதும் இருந்ததில்லை. நாமே எதோ காரணத்திற்காக அதை உருவாக்குவது நல்லது அல்ல.

தமிழர்கள் புத்தாண்டு துவக்கம் சித்திரை மாதமா  அல்லது தை மாதமா என்பதுதான் நம்மில் உள்ள கேள்வி.

தமிழ் அறிஞர்கள்  தை மாத துவக்கமே என்று சொல்கின்றனர். நம் நினைவு தெரிந்த நாளில் இருந்து சித்திரையை துவக்க மாதமாக கொண்டாடி வருகிறோம். அது எப்போதிருந்து என்று தெரியாது. நாயக்கர் காலத்தில் இருந்து நடைமுறைக்கு வந்ததாக சிலர் சொல்வர். அப்படி இருந்தால் அதுவரை தமிழர் புத்தாண்டு கொண்டாட்டம் இல்லாமல் இருந்தால்  யுகாதி தான் தமிழருக்கும் புத்தாண்டாக இருந்து இருக்க வேண்டும். யுகாதி சந்திரமான முறையைக் கொண்டது. தமிழர் புத்தாண்டோ சூரியமான முறையைக் கொண்டது.  ஆகவே அதனை மாற்ற  முடியாமல் போய் இருக்கலாம். ஆனால் அப்போதும் சித்திரைதான் முதல் மாதமாக இருந்ததா அல்லது வேறு மாதம் ஏதாவது இருந்ததா என்பதை பார்க்க வேண்டும்.

தமிழ் அறிஞர்கள் சித்திரை முதல் மாதமாக இல்லை தை முதல் நாள்தான் புத்தாண்டு துவக்கம் என்று ஆய்ந்து அறிந்து சொல்கின்றனர். ஆகவே நாம் தை முதல் நாளான பொங்கல் திருநாளை தமிழரின் புத்தாண்டாக கொண்டாடுவதே சிறப்பாகும்.


இது நாள் வரை சித்திரைதானே இருந்தது எதற்கு அதை மாற்ற வேண்டும் என்ற வினாவிற்கு நல்ல பல காரணங்களை விளக்கி சொல்லலாம்.     

No comments: