Mother to son
Well, son, I will tell you
Life for me aren’t been no crystal stairs
It's had tacks in it
And splinters
And boards torn up
And places with no carpets on floors
Bare
But all the time
I've been climbing on
And reaching landings
And turning corners
And sometimes going in the dark
Where there aren't been no light
So boy don't you turn back
Don't you set down on the steps
Cause you finds it's kinder hard
Don't you fall down -
For I've still going honey
I've still climbing
And life for me aren't been no crystal
stairs
By
LONGSTON HUGHES
நல்லது மகனே, சொல்வதை கேள்
பளிங்கு படிகட்டுகள் அல்ல
வாழ்க்கைப் பாதை…
ஒட்டி வைக்கப்பட்டது
விரிசலானது
உடைந்து போனது – அங்கே
கம்பளி விரிப்பு இல்லை
கட்டாந்தரை
ஆனாலும் எப்போதும் நான்
முன்னேறிக் கொண்டிருக்கிறேன்
இடைமேடை அடைகிறேன்
முட்டும் மூலையில் திரும்புகிறேன்
சிலநேரம் விளக்கொளி இல்லா இருளில் பயணிக்கிறேன்…
ஆதலால் மகனே ! நீயும்
திரும்பிடாதே, உட்காராதே
வழுக்கும் கடினபாதை அது
விழுந்து விடாதே
தேன்போல் இனியவனே.!
அதில்தான் நான் செல்கிறேன்
மீண்டும் முன்னேருகிறேன்
பளிங்கு படிகட்டுகள் அல்ல வாழ்க்கைப் பாதை
தமிழில்:
அருள்பேரொளி
-----------------------------------------------------------------------
இந்த ஆங்கில கவிதை உலகப்புகழ் பெற்ற கவிதைகளில் ஒன்று. இதை இயற்றிய கவிஞர் லாங்சுட்டன் ஊகிசு (1902-1967). கருப்பர் இனமக்களுக்கான Harlem Renaissance என்னும் கலை பண்பாட்டு இயக்கத்தை தோற்றுவித்தவர்களில் ஒருவர்.
No comments:
Post a Comment