Wednesday, January 6, 2016

வள்ளுவம்




திருக்குறள் தலைசிறந்த ஒரு வாழ்வியல் நூல்
அக்கால தமிழகச் சூழலில் தமிழர் தம் வாழ்நெறியை செம்மைபடுத்தி 
வையத்தில் வாழ்வாங்கு வாழ்வதற்கு ஏற்ற அறிவுரைகளை 
திருவள்ளுவர் குறிப்பிடுகிறார்
அக்காலத்தில் நிலவிய பல்வேறு கருத்துகளையும் கொள்கைகளையும் 
அவர் தெரிந்து இருக்கிறார்
அவைகளின் ஏற்கத் தக்கவைகளை மட்டுமே எடுத்து இயம்புகிறார்
தமக்கு உடன்படாத
தமிழரின் பண்பாட்டிற்கு ஒவ்வாத
வேற்றார் கொள்கைகளையும் கூட நளினமாக வள்ளுவர் மறுதலிக்கிறார்.. 

ஆனாலும் திறந்த மனதுடன் 
எப்பொருள் எத்தன்மைத்தாயினும்”                  ( குறள் 355 ) 
அதனை யார் யார்வாய் கேட்பினும்”  ( குறள் 423 ) 
அப்பொருளின் மெய்ப்பொருளை உணர்வதே உண்மையறிவு என்றும் சொல்கிறார்

இது அவரது சகிப்புத்தன்மைக்கும் சமனிய நோக்கிற்க்கும் சான்றாகும்

தம் கொள்கைகளுக்கு மாறானவரான
கேளாரும் கேட்டு உணரத்தக்க” (குறள்-643) சொற்களால் 
மாசற்ற சில சொல்லல்’ (குறள்-649) எனும் முறையில்
சுறுங்கக் கூறி விளங்க வைக்கிறார்

அதைத்தான் நாம் வள்ளுவம் என்கிறோம்

No comments: