Friday, January 15, 2016

தீர்கதரிசி - ஆடையைப் பற்றி


ஒரு நெசவாளி ஆடையைப் பற்றிக் கூறுங்கள் என்றதற்கு
அவர் பதில் சொன்னார்:

உங்கள் மிகுந்த அழகை
உங்கள் ஆடைகள் மறைத்து விடுகின்றன.
ஆனாலும்
அவை அசிங்கத்தை மறைப்பதில்லை.

ஆடையில் சுதந்திரத்தைத் தேடினால்
அது சேணத்தாலும் சங்கிலியாலும்
புணையப் பட்டிருப்பதைப் பார்க்கலாம்.

உங்கள் வாழ்க்கைச் சுவாசம் சூரிய ஒளியில்  
உங்கள் வாழ்க்கைக் கரங்கள் காற்றுவெளியில்  
இருந்தாலும் - உங்கள்
உடையால் குறைவாகவும்
உடலால் கூடுதலாகவுமா
சூரியனையும் காற்றையும் சந்திக்க முடிகிறது?

உங்களில் சிலர் சொல்வர்,
வடக்கிலிருந்து வரும் வாடைக் காற்றுதான்
நாம் அணியும் ஆடைகளை பின்னியதுஎன்று.
நான் சொல்கிறேன் ஆமாம் அந்த வாடைக் காற்றுதான்
தசை நார்களை நூலாக நூற்று
அவமான தறியில் நம் ஆடைகளை நெய்து
வேலை முடிந்ததும் காடு அதிர சிரிக்கிறது.

மறக்க வேண்டாம்,
நாணம் என்பது அசுத்தத்தைப் பாராமல் இருக்க
கண்களின் கவசமாக இருக்கிறது.
அசுத்தமில்லாத போது அந்த நாணம்
அடிமைப்பட்ட முடைநாற்றம் அடிக்கும்
மனதில் இல்லாமல் வேறு எங்கு போகும்?

மறவாதீர்
மண் வெறும் கால்களை பரிசித்து குதூகலிக்கிறது.

காற்று  தலை முடியை கலைத்து விளையாடுகிறது.

No comments:

Post a Comment