Saturday, December 19, 2015

சீர்திருத்தத் திருமணம் நடத்தும் முறை

 சீர்திருத்தத் திருமணம் இந்நாளில் மிகுதியும் மெற்கொள்ளப் படவேண்டியது இருக்கிறது. மணம் நடத்துவோர் சிற்றூராயினும் - தம் ஊரில் உள்ள வர்களை / குடும்பப் பெரியவர்களைக்  கொண்டே நடத்திக் கொள்ளலாம்.

1. அழைப்பிதழால் அல்லது வேண்டுகோளால் மண வீட்டில் குழுமியோர்அவையத்தார் ஆவார்.

2. இசை: இறை / நாட்டு /  தமிழ் வாழ்த்து

3. மணமக்கள் அவைக்கு வருதல்.

4. முன்மொழிவோர் அவையில் எழுந்து, அவைத் தலைமை தாங்கி,இத்திருமணத்தை முடித்துத்தரும்படி இன்னாரை வேண்டிக்கொள்கிறேன்,என்று முன் மொழிதல்.

5. அவையத்தாரின் சார்பில் ஒருவர் அதை, நாங்கள் ஆதரிக்கிறோம், என்றுவழிமொழிதல்.

6. முன் மொழிந்தார், வழி மொழிந்தார் அவைத் தலைவரை அழைத்துவந்துசிறப்புறுத்தி இருக்கை காட்டுதல்.

7. அவைத் தலைவர் முன்னுரை.

8. திருமணம் நடத்துதல்:

மணப்பெண், இன்னாரை நான் என் வாழ்க்கைத் துணைவராகக் கொண்டுவாழ்க்கை நடத்த ஒப்புகிறேன், என்று சொல்லல்.

மணமகனும் அவ்வாறு சொல்லல்.

அதன்மேல் இருவரும் மாலை மாற்றுதல்; கணையாழி மாற்றுதல். வாழ்க எனமுழங்குதல்.

9. தலைவர் மற்றும் அறிஞர் மணமக்களை வாழ்த்துதல்.

10.வரிசை:

அவையத்தார்க்கு வெற்றிலை, பாக்கு முதலிய வழங்குதல்.

இந்த நடைமுறைக்கு முதல்நாளே நீதிமன்றத்தில் மணமகன் மணமகள்மணப்பதிவு செய்து கொள்வ துண்டு. பிறகும் பதிவு அறிவிப்புச் செய்துகொள்ளலாம்.

இங்கு காட்டிய திட்டம் பெரும் பாலும் நடைபெறுகின்றது என்பது தவிர,இப்படித்தான் நடத்தப்பட வேண்டும் என்று கட்டுப்படுத்தியதாகாது. இதனிலும்சுருக்கமான முறையில் நடத்திக் கொள்ளலாம்.

No comments:

Post a Comment