தீர்கதரிசி - குழந்தைகளைப் பற்றி
ஒரு பெண் தன் குழந்தையை
மார்புடன் அணைத்துக் கொண்டு
குழந்தைகளைப் பற்றி சொல்லுங்கள்
என்று கேட்டபோது அவர் சொன்னார்:
”உங்கள் குழந்தைகள் உங்களுடையவை அல்ல.
அவர்கள் வாழ்க்கை ஏக்கத்தின் வாரிசுகள்.”
”குழந்தைகள்..உங்களின் மூலம் வந்தவர்கள்.
உங்களிடமிருந்து வந்தவர்கள் அல்ல.
உங்களோடு இருந்தாலும் உங்கள் சொந்தம் அல்ல. .
அவர்களின் சொந்த சிந்தனை வேறாக இருக்கும்,
அவர்களுக்கு நீங்கள் அன்பைத் தரலாம்.
ஆனால் உங்கள் எண்ணங்களை அல்ல”
”குழந்தைகளின் உடலுக்கு இருப்பிடம் தரலாம்.
உள்ளத்திற்கு அல்ல.
அவர்களின் உள்ளம் குடியிருக்கும் நாளைய வீட்டிற்குள்
உம்மால் கனவிலும் நுழைய முடியாது.”
”வாழ்க்கை பின்னோக்கிச் செல்வதோ
இறந்த காலத்தை இழுத்துச் செல்வதோ கூடாது - ஆதலால்
குழந்தைகளைப் போல் ஆவதற்கு நீங்கள் போராடலாம்.- ஆனால்
உங்களைப் போல் அவர்களை உருவாக்க முயலாதீர்.”
”குழந்தைகள் வில்லில் இருந்து விடுபட்ட உயிர்பெற்ற அம்புகள்.
பெற்றவர்களே நீஙகள்தான் வில்..
முடிவற்றப் பாதையில் முடிவான இலக்கை
அம்பு துரிதமாய் துளைக்க
வில்லாளன் வல்லமையுடன் உங்களை வளைக்கிறான்.
மகிழ்வோடு வளைந்து கொடுங்கள்.
பறக்கும் அம்பு மட்டும் அல்ல
கையில் இருக்கும் வில்லும் அவன் அன்பிற்குரியதே.”
No comments:
Post a Comment