தமிழ்நாட்டின்
மதுவிலக்குப் பற்றி . விவரங்கள் விளக்கங்கள் வெளியாகட்டும். உண்மைகள் உலகுக்குத்
தெரியட்டும். படிக்க கற்றுதந்தார் காமராஜர் குடிக்க கற்றுதந்தார் கருணாநிதி. இப்படி ஒரு
புலம்பல் எத்தனையோ ஆண்டுகளாக. நேருவுக்கு நெருக்கமானவர். இரண்டு பிரதமர்களை. இருக்கையில்
அமர்த்தியவர். இந்திய காங்கிரசின் இணையிலா தலைவர் என்றெல்லா பெருமைக்கும் உடையவர்.
மதுவிலக்கை மகாத்மாவின் மகோன்னதக் கொள்கையை மாநிலங்கள் எல்லாவற்றிலும் ஏன் அமுல்
படுத்தவில்லை என்று யாராவது கேளுங்கள், காந்தியார் கனவை நினைவாக்க காங்கிரசார்
செய்த காரியம் என்ன? 1966 ஆண்டுக்கு முன்பே தாம் ஆட்சிபுரிந்த
மாநிலங்கள் எல்லாம் மதுபானக் கடைகளைத் திறக்க எது காரணம் என்று கேட்பீர்.
1971 ல் கலைஞர்
ஆட்சியில் கள்ளுக்கடை திறந்தது கடும்குற்றம் என சொல்லுபவரே கேளுங்கள். மதுவிலக்கு
அன்று இரத்து செய்யவில்லை மாறாக தள்ளி வைக்கப்பட்டது மதுவிலக்கு அமுல்செய்ய
மானியம் மைய அரசு மறுத்தது எதனால் திறந்த கடைகளை மூடினால் மானியம் திறக்காமலே
கேட்டால் கிடைக்காது என்றனர் எந்த மாநிலமும் ஏற்காத நிலையில் சொந்த மாநிலத்தில்
சொற்பகாலம் திறந்து மூடுவோம் மதுக் கடைகள்
இரந்து கேட்கும் இழிநிலை எதற்கு உரிமையுடன் கேட்போம் உயர்நிதியம் உரிய நேரத்தில்
உரத்த குரலில்என்பதே காரணம் எவருக்கும் தெரியும் உண்பது சோறானால் உணருவீர் உண்மை
1973 ஆகஸ்ட்டில்
இரண்டே ஆண்டுக்குள் இழுத்து மூடப்பட்டது கள்ளுக்
கடைகள் கலைஞர் ஆட்சியில் 1974 செப்டம்பர் மீண்டும் பூத்தது பூரண மதுவிலக்கு கொண்டு
வந்தவர் கலைஞர் ஐம்பத்தாறு கோடி இழப்பீட்டுக் கணக்கு எடுத்துச் சொன்னார்
எல்லோரிடத்தும் மானியம் கேட்டார் மத்திய அரசிடம் மதுவிலக்கு மக்களுக்கானது அகில
இந்தியாவிலும் அமுல் படுத்தப்படும் அவசரம் வேண்டாம் ஆலோசனை செய்கிறோம் பாரதப்
பிரதமர் இந்திரா காந்தி பகர்ந்தார் என்பது பத்திரிகை செய்தி
இந்த நிலையிலே
நீதிமன்ற தீர்ப்பு ஒன்று இந்தியாவை நிலைகுலையச்
செய்தது வாதுசெய்ய முடியாமல் வாடச்செய்யும்
அரசியல் நெருக்கடி அம்மையார் இந்திராவை அலைகழிக்கச் செய்தது அதனால் அவசரச் சட்டம்
போட்டார் எமர்ஜென்சி என்று சென்னார் ஏதோச்சைகார ஆட்சி புரிந்து எதிர்த்தவரை
எல்லாம் சிறைக்குள் தள்ளினார் சித்ரவதை பண்ணிணார்
அப்போது தமிழகம்
தனித் தீவாய் இருந்தது. எமர்ஜென்சிக் கொடுமை எட்டிப் பார்க்க முடியவில்லை. சுதந்திரக் காற்றை
சுவாசிக்க முடியாமல். சுதேசியம் பேசியவர் எல்லாம் தமிழ்தேசம் வந்து தஞ்சம்
புகுந்தார்கள். கலைஞர் ஆட்சியின் கடாட்சம் அது.கர்மவீரர் காமராசரை கைது செய்ய கட்டளை
வந்தும் முடியாது என்றார் முத்தமிழ் அறிஞர் முத்துவேலர் மகன். மக்களாட்சித்
தத்துவத்தை யாரும் மண்தோண்டிப் புதைப்பதற்கு என்நாளும் மனதாலும் ஒப்போம் என்று சென்னைக்
கடற்கரையில் சூளுரைத்தார் அண்ணாவின் அன்புத் தம்பி
நேருவின் மகளே
திரும்பப் பெறுக நெருக்கடிநிலை சட்டத்தை என்று நேர்பட பேசினார் கலைஞர் நெஞ்சம்
பொறுக்கவில்லை.வஞ்சம் தீர்க்கப்பட்டது
1976 பிப்ரவர்
2. கலைஞர் ஆட்சி கலைக்கப்பட்டது. தமிழர் முன்னேற்றம் தடை செய்யப்பட்டது. மதுவிலக்கைப்
பற்றி மறுபடியும் பார்ப்போம்
1974 முதல்
1976 வரை முழுமதுவிலக்கு முதல்வர் கலைஞர் ஆட்சியில் எப்போதும் போல் பர்மிட் முறை தப்பாது
என்ற காரணத்தால்மருத்துவச் சான்றுடன். வயது வரம்பு 45 பர்மிட் கட்டணம் 500 ரூபாய்.இன்றைய
மதிப்பில் ஒரு லட்சம். உயர்ந்த கட்டணம் என்று உச்சநீதிமன்றம் வரை சென்று உத்தம
புத்திரர்கள் சிலர் உத்தரவு பெற்றார் 100 ஆகக் குறைக்க
கலைஞர்
ஆட்சியின் கடும் அமுலாக்கம் விலைஞர் செய்கையால் வீண்முயற்சி ஆனது ஆனால் வயதுவரம்பு
30 கட்டணம் ரூ 25 என குறைத்து எல்லோரையும் குடிக்கத் தூண்டிய மகான் யார் தெரியுமா? மதுவைத் தொடாத மாமனிதர் என்று மக்கள் நம்பிய
புரட்சித் தலைவர்
1971 ல்
மதுவிலக்கு தளர்த்தப்பட்ட போது சுதந்தராகட்சி உறுப்பினர் திரு ஹண்டே அவர்கள் ”அண்ணா வழியில் நடக்கிறோம் என்று சொல்லி
வருகிறீர்களே அதன்படி மதுவிலக்கு விசயத்தில் நடக்கிறீர்களா?” என்று கேட்டார்.
முதல்வர்
கலைஞர் ”திரு ராஜாஜி
மதுவிலக்கு விஷயத்தில் மிகத் தீவிரமானவர் அல்லவா இந்தியாவிலேயே தமிழகத்தில் முதல்
முதல் மதுவிலக்கு கொண்டு வந்தவர் அல்லவா அவரைத் தலைவராகக் கொண்ட சுதந்திரா
கட்சியின் முதல் அமைச்சர் சிங்தேவ் ஆளும் ஒரிசாவில் மதுவிலக்கு இல்லையே ஏன்” என்று கேட்டார்.
திரு ஹண்டே
அவர்கள் சாமார்த்தியமாக ”ராஜாஜிக்கும்
சிங்தேவுக்கும் பலபிரச்சனைகளில் கருத்து வேறுபாடு உண்டு ஆனால் அண்ணாவழி நடப்பதாகச்
சொல்லி ஊரை ஏமாற்றுகிறீர்கள்” என்று
சொல்லவும் சபாநாயகர் ”ஊரை
ஏமாற்றுவதாக சொல்லக்கூடாது அவை மரபு அல்ல” என்று சொல்ல வரும்போது கலைஞர் குறிக்கிட்டு ”உறுப்பினர் சொல்ல வேண்டியதை சொல்லி
முடிக்கட்டும்” என்கிறார்.
திரு ஹண்டே
அவர்கள் தொடர்ந்து “மதுவிலக்கை
ரத்து செய்துவிட்டு அண்ணாவைப் பின்பற்றுகிறேன் என்று சொல்கிறீர்கள். இராஜாஜி இந்த
விஷயத்தில் சில கருத்து வேறுபாடுகளுக்கு இடம் கொடுக்கிறார். அவர் கருத்தை நீங்கள்
ஏற்றுக் கொள்ள வேண்டியதில்லை” என்று பேசும்
போது அண்ணா.மதுவிலக்குப் பற்றி பேசிய பேச்சை எல்லாம் மேற்கோள் காட்டுகிறார்.
கலைஞர் அதற்கு
பதில் சொல்கிறார் பாருங்கள் “அண்ணாவைப்பற்றி
ஹண்டே இவ்வளவு மரியாதையாகப் பேசியதற்கு நன்றி. பாடப் புத்தகத்தில் அண்ணாவை பற்றி
ஒரு பாடம் சேர்த்ததற்கு கண்டனம் தெரிவித்த கூட்டத்தில் நீங்கள் பேசியவர் என்பது
நினைவில் இருக்கிறது. உங்களுடை தலைவர் ராஜாஜி அவர்கள் ”அகால மரணம் அடைந்தவர்கள் எல்லாம் அவதாரப்
புருஷன் ஆகமுடியாது” என்று
சொன்னதும் எங்கள் நெஞ்சில் இன்னும் உறுத்தாமல் இல்லை. ஆனால் அதை எல்லாம் ஒரு
பக்கம் ஒதுக்கிவிட்டு நடந்து கொள்கிறோம். இந்த நிலையில் இப்படியெல்லாம்
பேசியவர்களுக்கு அண்ணாவை பற்றி பேச என்ன தகுதி இருக்கிறது?”
( 21-06-1971
சட்டமன்ற நிகழ்ச்சி இது)
அது மட்டுமா மதுவிற்கு
எதிரான கருத்துகளை மக்களிடம் பரப்பிட கலைஞர் மதுவிலக்குப் பிரச்சாரக் குழு அமைத்து
எம்ஜிஆர்-ஐ தலைவர் ஆக்கினார் 1971-ல். 1989-ல் திரு கிருஷ்ணசாமி பாரதி சுதந்தரப்போராட்ட
தியாகி மாயாண்டி பாரதியின் மகனார்
2016 ல்
மீண்டும் திமுக ஆட்சி அமையும் அப்போது அய்யா சசிபெருமாள் அந்தப் பதவிக்கு வருவர்
என்று பந்தயம் கட்டியவர் உண்டு. அனால் அது பகல் கனவாக போனது மட்டுமல்ல அந்த
காந்தியர் கரண்ட்டு கோபுரத்தில் ஏறி ஆட்சியரை
மிரட்டிய போது உருட்டிவிடப்பட்டு உயிர் விட்டார் என்று ஊரார் பேசும்படி மர்மத்தில்
மரணம் சம்பவித்தது.
எம்ஜிஆர்
ஆட்சியிலோ அவருடைய அம்முவின் ஆட்சியிலோ எப்போதும் மதுவுக்கு எதிரான பரப்புரை
இருந்ததில்லை மாறாக மதுவிற்பனையைப் பரவலாக்கினர் மதுபானத் தொழிற்சாலைகள் அனுமதி
முதலில் பொன்மனச் செம்மல் ஆட்சியிலேதான் சாராய சாம்ராஜ்யம் சக்கைபோடு போட்டது யாராலும்
தடுக்க முடியாத அளவு ஜோராக வளர்ந்து விட்டது மதுப்பழக்கம்
81 முதல் 89
வரை எட்டு ஆண்டு குடிப்பழக்கம் எட்டாத நிலைக்குப் போனது 1976 தொட்டு 1989
வரைக்கும் பதிமூன்று ஆண்டுகள் பாழாகிப் போனது மதிகெட்ட தமிழர் வாழ்வு – கருணாநிதி மட்டும் இல்லை என்றால் இந்நாட்டு கதியென்ன
ஆகியிருக்குமோ நெஞ்சம் பதைக்கிறது நேர்மை நாணயம் உள்ளவர்கள் கொஞ்சமேனும் சிந்திக்கட்டும்
மதுவிலக்குக்
கொள்கையில் திமுகழகம் எந்த அளவு ஆழ்ந்த நம்பிக்கைக் கொண்டிருந்தது என்பதை “மதுவிலக்கு
மகாத்மியம்” பதிவில் என்ற 1989 ல்
திரு கிருஷ்ணசாமி பாரதி அவர்கள் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவில் இடம் பெற்ற
உறுப்பினர்கள் பெயர்களை குறிப்பிட்டு இருந்தேன்.
1971 ல் கழகப்
பொருளாளராக இருந்த புரட்சி நடிகர் எம்ஜிஆர் அவர்களின் தலைமையில் திமுக அமைத்த
மதுவிலக்குப் பிரச்சாரக் குழுவில் இடம்பெற்ற உறுப்பினர்கள் யார் யார் என்பதை
இப்போது காணவும்:
குழுவின்
தலைவர் கழகப் பொருளாளர் எம்ஜிஆர் உறுப்பினர்கள்
1.மதுரை முத்து எம்.எல்.சி
2.மேயர் சா.கணேசன்
3.நடிகமணி.டி.வி.நாராயணசாமி எம்.எல்.சி
4.சி.வி.எம்.அண்ணாமலை எம்.எல்.ஏ (அண்ணாவின்
பால்ய நண்பர்)
5.சுப்ரவேலு எம்.பி
6.நாகூர் அனீபா எம்.எல்.சி
7.பொற்செல்வி இளமுருகு
8 தமிழரசி .பி.ஏ
9.எல்.கணேசன் எம்.எல்.ஏ
திமுகழகத்தின்
மீதான பல அவதூறு குற்றச்சாட்டுகளில் ஒன்று 1971-ல் மதுவிலக்கு தளர்த்தப்பட்டது
என்பது...... ஏன் அன்று தளர்த்தப்பட்டது.. காரணங்கள் என்ன..? எவ்வளவு ஆண்டு காலம் இருந்தது.. எப்படி
நடைமுறை படுத்தப்பட்டது என்பதெல்லாம் தெரியாமல் கலைஞரை குற்றம் சுமத்தி வந்தனர்.
மதுக் குடி பழக்கம் இல்லாத நாடுகளே கிடையாது.. சில குறிப்பிட்ட இசுலாமிய நாடுகளைத்
தவிர பெரும்பாலும் எல்லா நாடுகளிலும் மதுக்குடி அனுமதிக்கப்பட்டே இருக்கிறது.
ஆனால் தமிழ்நாட்டின் இன்றைய கேடுகெட்ட நிலைமைக்கு காரண கர்த்தாக்கள் 13 ஆண்டுகாலம்
தொடர்ந்து ஆண்ட எம்ஜிஆர் மற்றும் ஐந்தாண்டு இடைவெளியில் 1991 லிருந்து 15
ஆண்டுகாலம் பரிபாலித்த அம்மையார் ஜெயலலிதா இருவருமே.....
டாக்டர்
சுசிலா நய்யார் என்று ஒரு காங்கிரஸ்காரர் இருந்தார். அந்த அம்மையார் அகில இந்திய
மதுவிலக்கு கவுன்சிலின் தலைவராக இருந்தவர். 1960 களில் காங்கிரஸ் கட்சி ஆண்ட
மாநிலங்களில் எல்லாம் அவர்களுடைய ஆதர்ச புருசரான காந்தியாரின் உயிர் கொள்கையான
மதுவிலக்கை கைவிட்டக் காலகட்டம். அப்போது மத்திய அரசு நியமித்த டேக்சிங் கமிட்டி
அகில இந்திய அளவில் காந்தி நூற்றாண்டுக்குள்ளாக மதுவிலக்கை அமுல்படுத்த வேண்டும்
என்று அறிவுறுத்தி இருந்தது.
காங்கிரஸ்
ஆளும் மாநில முதல்வர்கள் எல்லாம் மதுவிலக்கு கொள்கை அளவில் சரி என்றாலும் நடைமுறை
சாத்தியம் இல்லை என்று சொல்லி வந்தனர். குஜராத்திலும் தமிழ்நாட்டிலும் மட்டும்
மதுவிலக்கு அமுலில் இருந்தது. அண்ணா தமிழக முதல்வர். மதுவிலக்கினால் ஏற்படும்
இழப்புக்கு மத்திய அரசு ஈடுகட்ட வேண்டும் என்று கோரிக்கை இருந்தது. மத்திய அரசு
அதற்கு சம்மதிக்காதிருந்தது.
அந்த
சமயத்தில்தான் கோவாவில் பானாஜி நகரில் அகில இந்திய கங்கிரஸ் கமிட்டி மாநாடு நடந்தது.
அங்கே இந்த டாக்டர் சுசிலா நய்யார் ஒரு தீர்மானம் கொண்டு வருகிறார். டேக்சிங்
கமிட்டியின் பரிந்துரைப்படி 1969 காந்தி நூற்றாண்டுக்குள்ளாக இந்தியா முழுதும்
மதுவிலக்கு கொண்டு வர வேண்டும் என்று தீர்மானம் கொண்டுவந்தார். ஆனால் அந்த
தீர்மானம் ஏற்றுக் கொள்ளாமல் சமரச மாற்றுத் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டது.
அந்த
தீர்மானத்தை கொண்டு வந்தவர் யார் அந்த தீர்மானம் என்ன தெரியுமா? கொண்டு வந்தவர் தமிழ்நாட்டு
சி.சுப்பிரமணியம் அவர்கள். தீர்மானம் ‘உடனடியாக முழு
மதுவிலக்கு அகில இந்திய அளவில் நடைமுறை சாத்தியமில்லை. ஆதலால் காந்தி நூற்றாண்டு
காலத்தில் இருந்து ஏழு ஆண்டுகளில் படிப்படியான நடவடிக்கைகளின் மூலம் பூரண மது
விலக்கு நிலையை அடைய வேண்டும் என்பதாகும்.
திரு காமராஜர்
தலைவராக இருந்த காங்கிரஸ் 1968 ல் இப்படி தீர்மானம் இயற்றியது. இது மட்டும் அல்ல
காங்கிரசின் இலட்சணம். அப்போது மது விலக்கினால் வருவாய் இழந்தும் கோவை சென்னை
நகரங்களில் படிஅரிசி திட்டம் மற்றும் ரேசன் அரிசி வினியோகத்திற்கும் மத்திய அரசின்
அதிகபடியான நிதி ஒதுக்கீடு முதல்வர் அண்ணா அவர்கள் கேட்டு இருந்த சமயம் அது.
இந்த பானஜி
காங்கிரஸ் கமிட்டியில் தமிழ்நாட்டு காங்கிரசார் திரு வினாயகம் போன்றவர்கள் பேசியது
என்ன தெரியுமா? தமிழ்நாட்டிற்கு
நிதி ஒதுக்கீடு அதிகம் தேவை இல்லை. தமிழ்நாட்டில் மதுவிலக்கு ஒன்றும் பிரமாதமான
வெற்றி அல்ல. டாக்டர் சுசீலா நய்யார் தமிழ்நாட்டு அரசை தலைமீது வைத்து கொண்டாட
தேவை இல்லை என்று காமரசரின் சீடர் திரு வினாயகம் பேசியது குறிப்பிடத்தக்கது.
இப்படி
எல்லாம் நான் கமிட்டியில் பேசினேன் என்று அவரே பல கூட்டங்களில் சொல்லி
இருக்கிறார். இதெல்லாம் அந்த கால நவசக்தி நாத்திகம் பத்திரிகைகளில் செய்தியாக
வந்தது.
அண்ணா
முதல்வராக இருந்தபோது அகில இந்திய மதுவிலக்கு மாநாடு சென்னையில் நடந்தது.
அண்ணாதான் துவக்கி வைத்தார். இதே டாக்டர் சுசிலா நய்யார், இராஜஜி, காமரஜர், பக்தவத்சலம், காயிதே மில்லத் எல்லாம் கலந்து கொண்டனர்.
அப்போது அண்ணா சொன்னார் ‘எவ்வளவு கோடி
நஷ்டம் ஆனாலும் மதுவிலக்கை அமுல் படுத்தியே தீர்வேன்” என்று
அதே நேரத்தில்
வேறொன்றும் சொன்னார் “ புலிகளுக்கிடையே
சிக்கிய புள்ளிமானாக தமிழகம் இந்த விஷயத்தில் இன்னும் எத்தனை காலங்கள் இருக்கும்
என்பது தெரியாது” என்று.
அவருக்குப்
பிறகு கலைஞர் நிதிநிலை சமாளிக்க முடியாத அளவு போனபொது மத்திய அரசின் நிதி ஆதாரமும்
இல்லாத சூழலில் 21 கோடி ரூபாய் சம்பள கமிஷனுக்கு செல்லுத்துவதற்கும் நெருக்கடியான
சந்தர்ப்பத்தில் 1971 ல் மதுவிலக்கை ஒத்தி வைத்தார்.
காங்கிரஸ்
பானாஜி கமிட்டியில் சொன்னது போல ஏழு ஆண்டுகளில் அகில இந்திய ரீதியில் மதுவிலக்கு வரும்
என்ற எதிர்பார்ப்பிலும் மத்திய அரசின் நிதி கிடைக்கும் என்ற எண்ணத்திலும் 1974ல்
மீண்டும் மதுவிலக்கை கொண்டு வந்தார் என்பதுதான் உண்மை வரலாறு.
இதை திமுகழகத்தினர் மக்களிடம் கொண்டு செல்வதற்கும்
சொல்வதற்குமான நல் வாய்ப்பை தலைவர் கலைஞர் அவர்கள் ”ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கு அமுல்” என்ற அறிக்கை மூலம் ஏற்படுத்தி தந்ததாகக் கருதியே பல
விவரங்களை தொடர்ந்து 2௦16 தேர்தல் சமயம் முகநூலில்
எழுதி வந்தேன். மதுவிலக்கு மகாத்மியம் என்னும் பதிவின் தொடர்ச்சியாக அவற்றை சிறு மாற்றங்களுடன் இந்த பதிவை
செய்திருக்கிறேன்.